இலங்கையிலேயே உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அவுஸ்திரேலிய கல்வித் தகைமையொன்றைப் பெறுவதற்கான வாய்ப்பொன்று க. பொ. த. உயர்தரத்தை முடித்துக் கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்குச் சொந்தமான எடித்கோவன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அவுஸ்திரேலியா வியாபார, தொழில்நுட்பம் கல்லூரி ACBT இதனை வழங்குகின்றது.
பொதுநலவாய பல்கலைக்கழகங்கள் ஆண்டு நூலிலும், பல்கலைக்கழகங்களின் சர்வதேச கைநூலிலும் எடித்கோவன் பல்கலைக்கழகம், பட்டியல்படுத்தப்பட்டுள்ளதுடன், உலக தரத்திலான கல்வியின் வழங்குனராக அது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா, ஐக்கிய ராஜ்யம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஆபிரிக்கா மற்றும் இலங்கை ஆகியவற்றில் உள்ள கல்லூரிகளுடன் வழிகாட்டும் திட்டங்களில் உலகத்தின் முன்னணிவாய்ந்த வழங்குனராக விளங்கும் நவிட்டாஸ் குரூப்பின் அங்கத்துவத்தையும் திவிகிஹி கொண்டுள்ளது.
உயர்ந்த தொழிலைப் பெறுவதற்கான தகுதியைக் கொண்டிருக்கும் பட்டதாரிகளை உருவாக்குவதில் திவிகிஹி பிரபலம் பெற்றுள்ளது. இதற்கு தொழிற்றுறைக்கான கிராக்கிகளையும், அவசியங்களையம் மனதில் கொண்டு கட்டமைக்கப்பட்ட பயிற்சிநெறிகள் வழங்கப்படுவதே காரணமாகும்.
வியாபாரம், சந்தைப்படுத்தல், முகாமைத்துவம், கணனி விஞ்ஞானம், மற்றும் மென்கணிய எந்திரவியல் ஆகியனவற்றை ACBT இல் வழங்கப்படும் பட்டத் திட்டங்கள் உள்ளடக்குகின்றன. இது அவுஸ்திரேலியாவில் பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கான செலவினத்தில் ஒரு பகுதியைக் கொண்டு இலங்கையிலேயே பட்டத்தை முடிக்கக் கூடிய அனுகூலத்தை கொண்டுள்ளது.
தமது முதலாவது வருடத்தை முடித்துக் கொள்ளும் மாணவர்களுக்கு டிப்ளோமா வழங்கப்படும். அதைத் தொடர்ந்து மூன்று வருடங்களின் இறுதியில் பட்டமொன்று வழங்கப்படும். மாணவர்களுக்கு அவர்களது கற்கை நெறியின் போது கட்ட மட்டத்திலான தகைமைகளும் வழங்கப்படும். இது ஒரு மேலதிகமான அனுகூலமாக விளங்குகின்றது. ஆங்கிலத்திலும், கணிதத்திலும் அவசியமான திறன்கள் அற்ற மாணவர்கள் தமது திறமையை வளர்த்துக் கொள்வதற்காக உதவியும், இலவசமான திட்டங்களும் வழங்கப்படுகின்றன.
பட்டப்படிப்பு பயிற்சி நெறிகளுக்கான பிரவேசத் தகுதிகளாக மாணவர்கள் தமது க. பொ. த. உயர் தரத்தை முடித்திருக்க வேண்டும். தமது க. பொ. த. சாதாரண தரத்தை முடித்துக் கொண்ட மாணவர்கள் எட்டு மாதத்திலான அடிப்படைத் திட்டத்திற்கு தோற்றுவதற்கான தகுதியைக் கொண்டுள்ளார்கள்.
Source: Thinakaran.
Leave a comment