QR Code

Quick Response Code (QR Code) எனப்படும் இக்குறியீடானது அச்சுவார்ப்புரு (Matric Barcode) அல்லது இரு பரிமான-அளவு (2D) வார்ப்புரு மூலமாகக உருவாக்கப்பட்ட இன்றைய நவீன குறியீடாக அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இக்குறியீடு கைத்தொழில் நிறுவனங்களின் உள்ளார்ந்த (Internal) உற்பத்திகளில் இவை ஈடுபடுத்தப்பட்டு வந்தன. மோட்டார் வாகண உற்பத்திகள் மற்றும் அதன் உதிரிப்பாகங்களை அடையாளப் படுத்திக் கொள்ள அல்லது அதன் பயன்பாடுகளை அறிந்து கொள்ள இக் குறியீடுகள்  பயன்படுத்தப்பட்டு வந்தன.

இதன் பின்னர் காலத்தின் தேவை, அதீத தொழிநுட்ப வளர்ச்சி, வியாபாரம் போன்றவற்றின் காரணமாக தொழிற்சாலைக்கு வெளியில் இக்குறியீடுகள் புழக்கத்தில் வந்தன. முதன் முதலாக Toyota  நிறுவனம் தங்களது உதிரிப்பாகங்களுக்காக 1994ல் இக்குறியீட்டினை அறிமுகப்படுத்தி தொழிற்சாலை மட்டத்தில் மாத்திரம் ஈடுபடுத்தியிருந்தது.  வெள்ளைப் பிண்ணணியில் (White Background) கறுப்பு கோடுகளால் வரையப்படும் இக்குறியீடானது சதுரவடிவமுடையது. பைணரி, அல்பா நியூமெரிக் போன்ற தரவுகளை (Data) க் கொண்டு தயாரிக்கப்பட்டவை.

இன்றைய உலகச் சந்தையில்  கைத்தொலைபேசி பாவனையாளர்களின் நன்மை கருதி இக்குறியீடுகள் உற்பத்தியாளர்களால் தாயாரிக்கப்பட்டு வருகின்றன. இக் குறியீட்டு வாசிப்புமாணியை (Reading Meter)  தங்களது கைத்தொலைபேசிகளில் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். எனினும் கைத்தொலைபேசிக்கான விரைவான இனையத்தள வசதிகளைக் கொண்டுள்ள நாடுகளுக்கே இவை பொருந்தும். அமெரிக்காவில் 14 மில்லியன் கைத்தொலைபேசிப் பாவணையாளர்கள் 2011ல் இக்குறியீட்டினைப் பயன்படுத்தி வருகின்றனர் என அமெரிக்காவின் கொம்ஸ்கோர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரியாவில் 10 மில்லியன் வாடிக்கையாளர்களும் உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் சுமார் 33 சத வீதமானோரும் இக்குறியீட்டினால் நன்மையடைந்து வருகின்றனர். நுகர்வோரைக் கவரும் இலகுவான ஓர் வியாபாரச் சேவையாகவும் உலகில் இக்குறியீடு முதல் இடத்தைப் பெறுகின்றது.

பத்திரிகை அல்லது சஞ்சிகைகளில் குறித்த நிறுவனங்கள் தங்களது உற்பத்தி சம்பந்தமான விளம்பரங்களை வழங்கி இக்குறியீட்டையும் வழங்கும் பட்சத்தில், நுகர்வோர் குறித்த பொருட்களை அறிந்து கொள்ள, கொள்வனவு செய்து கொள்ள மேலதிகத் தகவல்களை அறிந்து கொள்ள இக்குறியீடு உதவுகின்றது. குறித்த நிறுவனத்துக்குச் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்யும் செலவுகளையும் நேரங்களையும் மற்றும் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொள்வதற்கான செலவுகளைத் தவிர்ப்பதிலும் நுகர்வோருக்குப் பங்களிப்புச் செய்யும். வீட்டில் இருந்து கொண்டே அல்லது வேலைத் தளங்களில் இருந்கொண்டே நுகர்வோர் இதன் மூலம் பயனடைய முடியும். பத்திரிகைகளில் வெளிவரும் ஆக்கங்கள், செய்திகள் போன்றவற்றிற்கான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உடன் தெரியப்படுத்தமுடியும். காகிதம், பேனா, முத்திரை என்று பதில் அனுப்பும் தேவையோ, தபால் போய்ச்சேரும் நாட்களோ  வாசகர்களுக்கு தேவைப்படாது. வயதுக் கட்டுப்பாட்டுப் பொருட்களை  பாடசாலை மாணவர்களும் சிறுவர்களும் தான் விரும்பும்படி கட்டுப்பாடின்றி கொள்வனவு செய்ய முடிவதால் இதற்கு ஒரு மாற்றுத் திட்டத்தினை நடைமுறைப் படுத்த இக்குறியீட்டாளர்கள் தற்பொழுது யோசித்து வருகின்றனர்.

இந்த குறியீட்டினை தாங்களும் வடிவமைக்க முடியும்.  QR Generators எனப்படும் இணையத்தளங்கள் மூலமாக இவற்றை இலகுவாக வடிவமைக்க முடியும். இதற்காக பல இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளான ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் வாழும் அதிகமான மக்கள் இதனால் பயனடைந்துள்ளனர். இலங்கையிலும் இன்று QR Code பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

MJ.

Published by

Leave a comment