– பழுலுல்லாஹ் பர்ஹான்
ஏறாவூர்: 400 வருடங்கள் பழமைவாய்ந்த இறை மனைகளில் ஒன்றாக விளங்கும் ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் அதன் பாரம்பரிய
கட்டமைப்பை மாற்றாமலும் மேலதிக விஸ்தரிப்புடன் ஸ்ரீலங்கா ஹிறாபௌண்டேஷடன் நிறுவனத்தின் நிதியுதவியுடனும் ,இப் பள்ளி நிருவாகத்தினது ஒத்துழைப்புடனும் புணர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி புணர் நிர்மாணம் செய்யப்பட்ட இப் பள்ளிவாயல் திறப்பு விழா நேற்று 25-06-2015 வியாழக்கிழமை இரவு இஷாத் தொழுகையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு அவரின் சேவையை பாராட்டி றைஹானுல் கவ்ம் எனும் சமூகத்தின் நறுமனம் வீசும் செடி எனும் பட்டம் ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் நிருவாகத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Leave a comment