All posts by yourkattankudy.com

Social Services

மின் கட்டணங்களில் திருத்தம்; புதிய மாற்றம் இன்று வெளியீடு

எரிபொருள் விலை உயர்வையடுத்து மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்து இன்று (15) அறிவிக்க உள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக் குழு தெரி வித்தது.

சனிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பெற்றோ லியக் கூட்டுத்தாபனம், மின்சார சபைக்கு வழங்கும் எரிபொருள் லீற்றருக்கான விலை யை 25 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மின் கட்டணத்தில் மாற்றம் செய்வது தொடர்பான இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படவுள்ளது. Continue reading மின் கட்டணங்களில் திருத்தம்; புதிய மாற்றம் இன்று வெளியீடு

UPDATES

அஸ்ஸலாமு அலைக்கும்

குறுஞ்சொற்கள் மற்றும்  தகவல் தொழிநுட்பம் கற்கை சம்பந்தமான ஆங்கில சொற்களும் எமது அறிவகம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. பயன் அடைந்து கொள்க.

மேலதிக பொதுஅறிவு சம்பந்தமான தகவல்களும் ஆக்கங்களும் இன்ஸாஅல்லாஹ் விரைவில் உங்கள் மூளைக்கு விருந்தாக அமைந்து செல்லும் என்பதனையும் மேலதிக பக்கங்களுக்கான தகவல்கள் சேகரிக்ககப்பட்டுக் கொண்டிருப்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

நன்றி.

-இயக்குனர்.

வாழ்த்துகிறோம்

இம்மாதம் ஜேர்மனியின் இலங்கைத் தூதுவராலயத்துக்கு துணைத்தூதுவராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் P.M. அம்சா அவர்களுக்கு,  தங்களது பணிகள் மென்மெலும் தொடர,

எங்கள் பிராத்தனைகளும் வாழ்த்துக்களும்.

உங்கள் காத்தான்குடி

Pic: srilankamuslimsworld.

 

 

Saint. Valentine’s Day அருட்தொண்டர். வலண்டைன் தினம்.

வாய்க்கு மெல்ல அவல் கிடைத்தது போல் ஊடகங்களின் வாய்களுக்கும் கைகளுக்கும் கட்டப்பட்ட விலங்குகளை அவிழ்த்துவிட்டது போல் ஓர் பூரிப்பு!

தனியார் ஊடகங்களின் ஊடுறுவலால் கிழக்காசிய நாடுகளுக்குள் சுமார் இருபது வருடங்களாக நோய்பரப்பும் கிருமிகளாய் பரவியதையடுத்து எங்கள் மனங்களிலும் சிந்தனைகளிலும் இன்று ஓர் தனியிடத்தை இந்த காதலர் தினம் ஏற்படுத்தி இருக்கிறது. Continue reading Saint. Valentine’s Day அருட்தொண்டர். வலண்டைன் தினம்.

க.பொ.த உயர் தரத்தின் பின்னர் ஓர் உலகளாவிய தகைமை

இலங்கையிலேயே உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அவுஸ்திரேலிய கல்வித் தகைமையொன்றைப் பெறுவதற்கான வாய்ப்பொன்று க. பொ. த. உயர்தரத்தை முடித்துக் கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்குச் சொந்தமான எடித்கோவன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அவுஸ்திரேலியா வியாபார, தொழில்நுட்பம் கல்லூரி ACBT இதனை வழங்குகின்றது. Continue reading க.பொ.த உயர் தரத்தின் பின்னர் ஓர் உலகளாவிய தகைமை

தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையில் தங்கியுள்ள பதின்மூன்று பிளஸ் வெற்றி

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது எப்படி என்பது தொடர்பாகவே பெரும்பா லான கருத்தாடல்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த தீர்வு காணும் விடயத்தை முன்வைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் தமக்குத் தெரிந்த சில கருத்துக்களை முன்னிலைப்படுத்தி மக்க ளைத் தமது பக்கம் ஈர்க்க முற்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. அரசியலில் வங்குரோத்து நிலை கண்ட சில அரசியல் வாதிகளோ இந்த விடயத்தைப் பெரும் தர்க்க மாக்கி வருவதுடன், சம்பந்தப்பட்ட இரு தரப்புக்கள் ஒற்றுமைப்பட்டாலும் அவர்களை ஒன்றுசேர விடாது பிரித்தாளும் தந்திரத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். Continue reading தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையில் தங்கியுள்ள பதின்மூன்று பிளஸ் வெற்றி

QR Code

Quick Response Code (QR Code) எனப்படும் இக்குறியீடானது அச்சுவார்ப்புரு (Matric Barcode) அல்லது இரு பரிமான-அளவு (2D) வார்ப்புரு மூலமாகக உருவாக்கப்பட்ட இன்றைய நவீன குறியீடாக அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இக்குறியீடு கைத்தொழில் நிறுவனங்களின் உள்ளார்ந்த (Internal) உற்பத்திகளில் இவை ஈடுபடுத்தப்பட்டு வந்தன. மோட்டார் வாகண உற்பத்திகள் மற்றும் அதன் உதிரிப்பாகங்களை அடையாளப் படுத்திக் கொள்ள அல்லது அதன் பயன்பாடுகளை அறிந்து கொள்ள இக் குறியீடுகள்  பயன்படுத்தப்பட்டு வந்தன. Continue reading QR Code

அறிவகம்

அஸ்ஸலாமு அலைக்கும்

பொது அறிவுகள் (General Knoweledge) சம்பந்தமான தகவல்களுக்காக இப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பொதுப் பரீட்சைகளுக்குத் தோற்றவிருக்கும் பரீட்சாத்திகளுக்கு இப்பக்கம் பெரிதும் உதவும். வாசகர்களும் பொது அறிவு சார்ந்த விடயங்களை இப்பக்கத்திற்கு அனுப்பி வைக்கலாம். மேலதிக தகவல்கள் தொகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விரைவில் அவை பதிவேற்றப்படும்.

இணையத்தள வசதி உள்ளவர்கள்  இப்பகுதியில் வழங்கப்பட்டுள்ள விசேட பொது அறிவு சம்பந்தமான இணையத்தளங்களில் தங்களது அறிவுகளைத் தேற்றிக் கொள்ளமுடியும். சிறுவர்களுக்குத் தேவையான அறிவுக்களங்களும் இப்பகுதிகளில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

நன்றி.

LATEST SPORTS

ENGLAND V PAKISTAN SERIES 2012.

Mon Feb 13 15:00 local | 11:00 GMT 1st ODI – Pakistan vs England Sheikh Zayed Stadium, Abu Dhabi
Wed Feb 15 15:00 local | 11:00 GMT 2nd ODI – Pakistan vs England Sheikh Zayed Stadium, Abu Dhabi
Sat Feb 18 15:00 local | 11:00 GMT 3rd ODI – Pakistan vs England Dubai International Cricket Stadium, Dubai
Tue Feb 21 15:00 local | 11:00 GMT 4th ODI – Pakistan vs England Dubai International Cricket Stadium, Dubai
Thu Feb 23 20:00 local | 16:00 GMT 1st T20 – Pakistan vs England Dubai International Cricket Stadium, Dubai
Sat Feb 25 20:00 local | 16:00 GMT 2nd T20 – Pakistan vs England Dubai International Cricket Stadium, Dubai
Mon Feb 27 20:00 local | 16:00 GMT 3rd T20 – Pakistan vs England Sheikh Zayed Stadium, Abu Dhabi