அன்புப் பொதுமக்களுக்கு,
நோன்புப் பெருநாள் பஸார் மற்றும் களியாட்ட நிகழ்வுகள்-2023 தொடர்பில்,பொதுத்தளங்களிலும் (சமூக வலைத் தளங்கள்) சபையின் உத்தியோகபூர்வ Website இன் ஊடாகவும் பல்வேறு முறைப்பாடுகள், குறைபாடுகள் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றுக்கான விளக்கத்தினை சபையின் செயலாளர் என்ற வகையில் வழங்க வேண்டியது எனது பொறுப்புக்கூறலின் ஒரு பகுதியாகக் கருதி காத்தான்குடி நகர சபைக்கும் புதிய காத்தான்குடி மொஹிதீன் பெரிய ஜும் ஆப் பள்ளிவாயலுக்கும் இடையே உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. பிரதி வருடமும் பெருநாள் பஸார் புதிய காத்தான்குடி முகைதீன் பெரிய ஜும் ஆப் பள்ளிவாயலால் வரு ஏற்பாடு செய்வது இங்கு குறிபிடத்தக்கது.

இவ் உடன்படிக்கயின் பிரகாரம்:
- 2023.04.22 – 2023.04.28 வரை களியாட்ட நிகழ்வு மற்றும் பெருநாள் பஸார் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது
- நகர சபை களியாட்ட நிகழ்வுக்கான டிக்கட்டினை நடத்துனர்கள் பகிர்ந்தளிப்பது என்றும்.அதன் வருமானத்தில் 60% நடத்துனர்களுக்கும் 25% பள்ளிவாயலுக்கும் 15% நகர சபைக்கும் வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
- ஆண்களை மட்டும் சிறுவர்களுடன் இணைத்து அனுமதிப்பதா அல்லது பெண்களை குறிப்பிட்ட தினங்களில் மாத்திரம் அனுமதிப்பதா என்பது தொடர்பில் காத்தான்குடி முகைதீன் பெரிய ஜும் ஆப் பள்ளிவாயல் ஜம் இய்யதுல் உலமா மற்றும் சம்மேளனத்துடன் இணைந்து தீர்மானித்துக்கொள்ள வேன்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
- பெருநாள் பஸார் கடை வருமானத்தில் பள்ளிவாயல் 60% உம் சபைக்கு 40% உம் எனத் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் நிருவாக மற்றும் இடைநேர் செலவுகளை பள்ளிவாயல் பொறுப்பெடுப்பது என்றும் முடிவு எட்டப்பட்டது.
இருந்தபோதிலும் 1 ஆம் நாள் களியாட்ட நடத்துனர்களால் இடம்பெற்ற பொருத்தமற்ற சில விடயங்களால், நகர சபை உத்தியோகத்தர்களாலேயே 23.04.2023 முதல் 28.04.2023 வரை டிக்கெட் விநியோகிக்கப்பட்டதுடன் பள்ளிவாயல் ஒழுங்கமைப்பினையும் மேற்கொண்டது.
இன்ஷா அல்லாஹ்,
மேற்படி நிகழ்வின் மூலம் மொத்தமாக நகர சபைக்கு ரூபா. 1,917,628.00 கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை பொதுமக்கள் நேரடியாக நலன்பெறும் பொருட்டு எமது ஆற்றங்கரைப் பகுதியை புனரமைத்து பொழுது போக்கு இடமாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே இதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்வதுடன் மேற்படி பெருந்தொகையான வருமான சேகரிப்புக்கு உறுதுணையாக இருந்த சபையின் கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், வருமானப் பரிசோதகர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
” மக்கள் பணம் நிச்சயம் மக்களையே சென்றடையும்”
அதுவே ஊள்ளூராட்சி மன்றங்களின் இலக்கு.
செயலாளர்
நகர சபை
காத்தான்குடி
2023.05.10