உலகக்கிண்ணம்: கட்டார் கடந்துவந்த கடினபாதை!

முகமட் ஜலீஸ், இங்கிலாந்து

2010 டிசம்பர் மாதம்: 2022 FIFA உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடாத்த கட்டாருக்கு அனுமதி கிடைத்தது. கட்டார் பணம் செலுத்தியே இந்த Bid இல் வென்றதாக அன்று முதல் இன்றுவரை பல விமர்சனங்கள் விவாதிக்கப்பட்டுவரும் நிலையில் அவை எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் முன்னணிப் போட்டிகளைப் பின்தள்ளி, கட்டார் 2022 உலகக் கிண்ணத்தை நடாத்தும் வாய்ப்பைப் பெற்றது.

இதன் மூலம் மத்திய கிழக்கில் கால்ப்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டியை முதன்முதலில் நடாத்தும் நாடாக கட்டார் திகழ்கிறது.

குறிப்பாக ஐரோப்பாவின் குளிர்காலத்தில் முதன் முதலில் இடம்பெறும் உலகக்கிண்ணப் போட்டியாக வரலாறு படைக்கிறது. லண்டன், பரிஸ் கிறிஸ்மஸ் பண்டிகை காட்சியறை அழகு பொம்மைகளுடன் கட்டார் உலகக்கிண்ண பதாதைகளும் ஒன்றடக்கலந்து காட்சியளிக்கின்றன!

2011 ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை கட்டார் சந்தித்த சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல!

FIFA அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டது என்ற சந்தேகத்தில் மே 5இல் போட்டியை நடாத்தும் அனுமதி இடைநிறுத்தம்.

அதிவெப்ப காலநிலை உலகக் கோப்பைக்கு ஆகாது.

கட்டார் விளையாட்டு மைதானங்களை அமைப்பதற்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் வதைக்கப்படுகிறார்கள்.

2022 உலகக்கிண்ணத்தை நடாத்தும் சந்தர்ப்பத்தை இங்கிலாந்து ஏன் தவறவிட்டது என்ற கேள்வியை பிரித்தானிய பாராளுமன்றம் எழுப்பியமை.

ஜூலை17, 2012: அமெரிக்க சட்டத்தரணி மைக்கல் கேர்ஸா, ஜேர்மனி நீதிபதி ஹென்ஸ் ஜோசிம் ஆகியோர் உள்ளடங்கிய இலஞ்ச ஊழல் விசேட விசாரணைக் குழு ஒன்றை FIFA அமைத்தல்.

ஆயிரக்கணக்கான நேபாளத் தொழிலாளர்கள் நவீன கால அடிமைகள் போல் கட்டார் நடாத்துவதாக பிரிட்டிஸ் நாளிதழ் த கார்டியன் செப்டம்பர் 25, 2013 இல் செய்தி வெளியீடு.

Amnesty International அமைப்பும் இவ்வாறான அறிக்கையொன்றினை நவம்பர் 2013 இல் வெளியிட்டமை.

FIFA executive Warner இற்கும் அவரது குடும்பத்திற்கும் 2மில

லியன் அமெரிக்க டொலர்களை கட்டார் வழங்கியதாக மற்றுமொரு பிரித்தானிய நாளிதழான த டெலிகிராப் பத்திரிகையின் செய்திப்பிரசுரம்.

நவம்பர் 13, 2014: ரஷ்யாவுக்கும், கட்டாருக்குமிடயில் தொடர்பிருப்பதாக 403 பக்க அறிக்கை ஒன்றினை விசாரணைக்குழு FIFA விடம் சமர்ப்பித்தது. ஆனால் ஆய்வு இன்னும் நிறைவடையவில்லை எனவும் அறிக்கை தெரிவித்தது.

நவம்பர் 24, 2014: அறிக்கை தெளிவில்லாத்தால், கட்டாருக்கே மீண்டும் சந்தர்ப்பம் வழங்குவதாகவும், அந்நாட்டின் வெப்பம் குறைவாக இருக்கும் வருட இறுதிப்பகுதியில் நடாத்தப்பட வேண்டும் எனவும் FIFA அறிவிக்கிறது.

செப்டம்பர் 25, 2015: நவம்பர் 21இல் உலகக்கிண்ணம் ஆரம்பம் என FIFA அறிவிக்கிறது.

மே 19,2017 கலீபா சர்வதேச அரங்கு தயார் நிலையில்

ஜூன் 27, 2017: கட்டார் லஞ்சம் வழங்கியதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என FIFA அறிவிக்கிறது.

செப்டம்பர் 04, 2019 இறுதியும் உத்தயோகபூர்வமான LOGOவை கட்டார் அதனது 25 நகரங்களில் அறிமுகப்படுத்துகிறது.

ஓகஸ்ட் 30,2020: வெளிநாட்டு தொழிலாளர் நலன் கருதி அடிப்படை மாதச்சம்பளம் தலா 1000 றியால்கள் என்பதை கட்டார் அறிவிக்கிறது.

ஜனவரி 19, 2022: இனையத்தளத்தில் உலகக்கிண்ண நுழைவுச்சீட்டுக்ள் விற்பனைக்கு வருதல். உள்ளூர்வாசிகளுக்கான சாதாரன நுழைவுச்சீட்டின் பெறுமதி வெறும் 40 றியால்கள் (11USD)மாத்திரமே.

இது 1986 ஆல் மெக்சிகோவில் இடம்பெற்ற உலகக்கிண்ண நுழைவுச்சீட்டுக்களின் விலைக்குப் பின்னர் குறைந்த கட்டணமாக பதியப்படுகிறது.

இவைகளைக் கடந்து……

வெளநாட்டு இரசிகர்களுக்கு மதுபானத்தடை பற்றி ஆங்கில ஊடகங்கள் பல இன்று தலைப்பிட்டிருந்தன!

இவை அத்தனை தடைகளையும் தாண்டி டோஹா தலை நிமிர்ந்து நிற்கிறது.

பாலைவனத்துக் காற்றும் பேர்சியன் வளைகுடாவின் அலைகளும் கட்டாரை ஆரத்தழுவிச் செல்லட்டும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s