கொழும்பு: மஹிந்த குடும்பத்தின் அதி நம்பிக்கைக்குரிய அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் சிரேஷ்ட உறுப்பினர் ரிஸ்வி முப்தி உட்பட பலர் 40 நாட்களைக் கடந்து காணாமல் போயுள்ளனர்.
மஹிந்த குடும்பத்திற்கு விசுவாசிகளாக இருந்து மார்கத்தை விற்று, முஸ்லிம்களின் உரிமைகளை விட்டுக்கொடுத்து தங்கள் சொகுசு வாழ்க்கையில் லயித்திருந்த இவர்களை இலங்கை முஸ்லிம் சமூகம் அன்றே கண்டுகொண்டது.

இங்கிலாந்து உடபட இன்னும் பல நாடுகளுக்கு மார்க்க உபதேச விஜயமென பேரில் விஜயம் சென்று “கலக்சனோடு” நாடு திரும்பும் இத்தகைய உலமாக்களுக்கு மஹிந்த குடும்பத்தின் அரசியல் இழப்பு தங்களால் ஜீரணிக்க முடியாத்தொன்றாகவே இவர்களுக்கு அமையும்.
வெசாக் கூடு ஏற்றுதல், மத்ரஸாக்களில் பூஜைவழிபாடுகள் சோடனை, பள்ளிவாயலுக்குள் “பன“ ஓத அனுமதித்தமை, மஹிந்த குடும்பத் தலைவர்களுக்காக ஆசி வேண்டி பள்ளிவாயல்களில் பிரார்த்தனை மற்றும் இவர்களுக்கான பிறந்தநாள் பிரார்த்தனைகள், கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு மிம்பரில் கோட்டாவை புகழ்ந்து தள்ளியமை என பல விமரசனங்கள் இவர்கள் மீதுண்டு!
சமூகத்தை விற்று பிழைப்பு நடத்தியதற்காக இலங்கை முஸ்லிம்களிடம் இவர்கள் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும்!