மத்திய கிழக்கிலிருந்து மீண்டும் ஐரோப்பா நோக்கி நகர்ந்துள்ள போர் மேகங்கள்: ஏன் உக்ரேனை ஆக்கிரமிக்க வேண்டும் ?

ஒரு போர் ஏற்பட்டால் அதில் யார் வெற்றி பெறுவார்கள் என்றும், தான் சார்ந்த தரப்பு வெற்றிபெற வேண்டும் என்றும் விரும்புவது மனிதர்களின் இயல்பு. ஆனால் போர் என்பது மிக கொடூரமானதென்றும், முடியுமானவரையில் அது தவிர்க்கப்படல் வேண்டுமென்றும் சிந்திக்கின்ற மனிதர்கள் எம்மத்தியில் மிக குறைவு.

உலக வரலாற்றை புரட்டிப்பார்த்தால் உலகம் தோன்றியதிலிருந்து ஏதோவொரு மூலையில் போர் நடந்துகொண்டே வருகின்றது. நவீன காலத்தில் ஏற்பட்ட முதலாம், இரண்டாம் உலக போரில் ஐரோப்பாவில் மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், அங்கவீனமடைந்தும், தொழிலின்றி உண்ண உணவின்றி சொல்லொண்ணா துயரங்களை அம்மக்கள் எதிர்கொண்டனர்.

இரண்டாம் உலகப்போருக்கு பின்பு மத்தியகிழக்கில் இஸ்ரேல் என்னும் நாடு உருவாக்கப்பட்டதுடன், அங்கு எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்பு உலக மேலாதிக்கவாதிகளின் கவனம் முழுவதும் மத்தியகிழக்கு பக்கம் திரும்பியது. அதாவது ஐரோப்பா போரிலிருந்து விடுபட்டு கைத்தொழில் அபிவிருத்தி நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கையில் மத்திய கிழக்கு பிராந்தியம் போர்க்கோலம் பூண்டது.

அதாவது இஸ்ரேலை பாதுகாப்பதற்காகவும், மத்தியகிழக்கில் காணப்படுகின்ற எண்ணை வழங்களை சுரண்டிக்கொள்ளும் நோக்கிலும் மேலாதிக்க நாடுகள் மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளுக்கிடையில் பிளவுகளை உருவாக்கி மோதல்களை ஏற்படுத்திவிட்டு அவர்களே அங்கு மத்தியஸ்தம் வகித்ததுடன், தங்களது படைகளை அங்கு நிலைநிறுத்தி உள்ளனர். 

இவ்வாறு இரண்டாம் உலகமகா யுத்தத்திற்கு பின்பு மத்திய கிழக்கில் அமெரிக்கா தங்களது அனைத்து கவனத்தினையும் செலுத்திக்கொண்டிருந்த நிலையில், சத்தமின்றியும், ஆர்பாட்டமின்றியும் சீனா உலகின் முதன்மை சக்தியாக வளர்ந்துவிட்டது. சீனாவின் வளர்ச்சியினால் தங்களது நாட்டை உலகின் இரண்டாம் நிலைக்கு தள்ளிவிடுமோ என்று அமெரிக்காவை அச்சமடைய செய்தது. 

சீனாவின் துரித வளர்ச்சியைக்கண்டு விழித்துக்கொண்ட அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ஆட்சியின்போது சீனாவுக்கு எதிராக பலவிதமான நெருக்குதல்களை கொடுத்தார். அவர் ஆரம்பித்ததை இன்றைய ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்கின்றார். 

அதாவது மத்திய கிழக்கில் முழுமையாக கவனம் செலுத்துவதில் பிரயோசனமில்லை என்று அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உணர தொடங்கியதுடன், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் தங்களது முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தது. அதன் முதல்கட்டமாக சவூதி அரேபியாவுடன் சேர்ந்து “யேமன்” மீது நடாத்திய தாக்குதலிலிருந்து அமெரிக்கா விலகியதுடன், சவூதி அரேபியாவில் பொருத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் வான்பாதுகாப்பு ஏவுகணைகளை அங்கிருந்து அகற்றி, அதனை ரஷ்யாவின் எல்லையில் உள்ள நேட்டோ நாடுகளில் அமைத்துள்ளது. 

அத்துடன் சவூதி அரேபியா போன்ற சில நாடுகளுக்கு அமெரிக்கா தனது ஆயுத வர்த்தகத்தையும் நிறுத்தியதுடன் ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் மீண்டும் கைச்சாத்திடும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. 

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேற்றியதுடன், ஈராக், சிரியா போன்ற நாட்களில் உள்ள படைகளை முழுமையாக வெளியேற்றுவது பற்றியும் ஆராய்ந்து வருகின்றது. 

அவ்வாறு மத்திய கிழக்கிலிருந்து  தனது கவனத்தை குறைத்து சீனாவை அச்சுறுத்தும் நோக்கில் தென் சீன கடல் பிரதேசத்திலும், தாய்வான் விவகாரத்திலும் மூக்கை நுளைத்துள்ளதுடன், ரஷ்யாவை அச்சுறுத்தும் நோக்கில் அதன் அண்டைய நாடுகளில் தனது ஏவுகணை மய்யங்களை நிறுவியுள்ளது. 

சோவியத் யூனியனிலிருந்து பிரிந்துள்ள நாடுகளை ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ அணியில் இணைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் உக்ரேனை நேட்டோவில் இணைக்கும் முயற்சியை தடுக்கும் நோக்கில் “ரஷ்யாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும்படி” ரஷ்ய அதிபர் கோரியிருந்தார். அவரது கோரிக்கை நேட்டோ நாடுகளினால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்தே உக்ரேனை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.

அதாவது இரண்டாவது உலக போருக்கு பின்பு மத்திய கிழக்கிலிருந்த போர் மேகங்கள் மீண்டும் ஐரோப்பா நோக்கி நகர்ந்துள்ளது. 

இது பற்றிய முழுமையான விபரங்களை அடுத்துவரும் கட்டுரைகளில் விரிவாக ஆராய்வோம்.

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s