லண்டன்: நேற்று புதன்கிழமை காலை பிரான்ஸ் ஊடாக பிரித்தானியாவிற்குள் நுழைய முயன்ற 40 நபர்களை ஏற்றிவந்த படகு கவிழ்ந்து மூழ்கியதில் ஒரு கற்பிணித் தாய், மற்றும் சிறுவர்கள் உட்பட 31 பேர் அகால மரணத்தைத் தழுவியிருக்கின்றனர்.
கண் இமைப்பதற்குள் கரையைத் தொடும் அதி வேகத்தைக் கொண்ட இவ்வாறான படகுகள் மூலம் வருடத்தற்கு 25,000 நபர்கள் பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக நுழைவதாக பிரிட்டன் தெரிவிக்கிறது.
இவ்வாறு சட்டவிரோதமாக பிரான்ஸ் கடல்வழி எல்லை ஊடாக பிரித்தானியாவிற்குள் நுழைபவர்களை பிரானஸ் எல்லை கண்காணிப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தாமல் உட்கார்ந்திருப்பதாக பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமாக நுழைபவர்களின் அகதி கோரிக்கை சட்டங்களில் எதிர்காலத்தில் கடுமையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமென பிரித்தானிய உள்துறை செயலாளர் பிரிட்டி படேல் தெரிவித்துள்ளார்.
– முகமட் ஜலீஸ்