த.தே.கூட்டமைப்பு என்னும் பல கட்சிகள் ஒரே கொள்கையிலும், மு.காஎன்னும் ஒரு கட்சி பல கொள்கையிலும் பயனிப்பதேன் ?

தமிழரசு கட்சியை பிரதானமாகக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பில் அரசியல் கட்சிகளும், முன்னாள் போராட்ட இயக்கங்களும் உள்ளன. அதாவது பல கட்சிகளை உள்ளடக்கிய ஓர் கூட்டணிதான் தமிழ் தேசிய ஊட்டமைப்பாகும்.

மிதவாதம், கடும்போக்குவாதம் என்றரீதியில் இவர்களுக்குள் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும்,  பாராளுமன்றத்திலும், வெளியிலும் தமிழ் சமூகம் சார்ந்த எந்தவொரு விடயத்திலும் வெற்றியோ, தோல்வியோ கொள்கையில் உறுதியாக உள்ளனர்.     

வளைந்து நெளிந்து பின்கதவால் சென்று, கூனிக் குறுகி அரசாங்கத்திடம் பிச்சை கேட்கும் பழக்கம் இவர்களிடமில்லை. அத்துடன் மக்கள் மத்தியில் வீரம் பேசிக்கொண்டு ஆட்சியாளர்களிடம் நளினம் காட்டுவதுமில்லை.  

தேர்தல் மேடைகளில் அரசாங்கத்தை திட்டி தீர்த்துவிட்டு தேர்தல் முடிந்ததும் அரசாங்கத்தின் காலில் விழுந்து பதவி கேட்டு அலைந்ததுமில்லை. அரசாங்கத்திடம் மண்டியிடாமல் நெஞ்சை நிமிர்த்தி சமூகத்துக்காக பாராளுமன்றத்தில் வீரத்துடன் ஆற்றுகின்ற உரையானது மிகவும் வலுவானதும் உறுதியானதுமாகும். 

முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கூட்டணியல்ல. ஒரே தலமைத்துவத்தின் கீழ் இயங்குகின்ற ஒரே கட்சி. ஆனால் இதற்குள் ஆயிரம் கொள்கைகளும், குழப்பங்களும், முரண்பாடுகளும் இன்று வலுவடைந்துள்ளது.  

“சமூகத்தின் பாதுகாப்பு, அரசியல் உரிமை, சமூக ஒற்றுமை” என்ற கொள்கையின் அடிப்படையில் தலைவர் அஸ்ரபினால் கட்டியமைக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரசானது தலைவரின் மறைவுக்கு பின்பு முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது.   

எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று பதவியை அடைந்தால் போதும் என்ற மனப்பான்மையில் தேர்தல் மேடைகளில் தங்களது சக்திக்கு மீறிய வாக்குறுதிகளும், தேசிய கட்சிகள் போன்று வாக்குகளுக்காக பணமும் விநியோகிக்கப்படுகிறது. 

பணம் பெறுகின்ற எம்மவர்கள் எவரும் இவ்வளவு பணம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று சிந்திப்பதில்லை.  

தலைவர் அஸ்ரப் அவர்கள் ஒருபோதும் தேர்தல் வெற்றிக்காக பொய்யான வாக்குறுதிகளை வழங்கியதில்லை. வாக்குகளுக்காக பணம் விநியோகித்ததுமில்லை. இது கட்சியின் கொள்கையுமல்ல. 

ஆனால் இன்று தலைவரது கொள்கைகள் அனைத்தும் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளதுடன், வாக்குகளை கவர்வதற்காக மட்டும் தலைவரது புகைப்படமும், அவர் இயற்றிய பாடலும் பாவிக்கப்படுகின்றது.   

எனவே தலைவர் அஸ்ரப் உருவாக்கிய கட்சியில் அவர் காண்பித்த கொள்கையில் பயணிக்காமல் சுயநல போக்கில் சந்தர்ப்பவாத அரசியல் செய்து பதவிக்காகவும், அதிகாரத்துக்காகவும் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வந்ததன் காரணமாகே ஒரே கட்சிக்குள் பல கொள்கைகளும், முரண்பாடுகளும் ஊதிப்பெருத்துள்ளது. இதற்கு யார் காரணம் என்பதனை நான் கூறித்தான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை.

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s