லண்டன்: பதினெட்டு வயதே நிரம்பிய Bபிரிட்டனைச் சேர்ந்த Emma Raducanu அமெரிக் ஓபன் டென்னிஸ் சுற்றில், சுவிஸ் வீராங்கனை Belinda Bencic ஐ, தோற்கடித்து, அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறார்.
ரொமேனிய தந்தைக்கும், சீனத் தாய்க்கும் கனடாவின் டொரண்டோ நகரில் 13 November 2002 இல் Emma Raducanu பிறந்தார்.
கனடாவில் நிதித்துறையில் வேலைசெயத எமாவின் பெற்றோர், எமாவின் இரண்டாவது வயதில் கிரேட்டர் லண்டனுக்கு குடிபெயர்ந்தனர்.
லண்டன் முன்னணி ஆரம்பப் பாடசாலையில் கல்விகற்ற இவர், தனது கல்வித் திறமையால் grammar பாடசாலைக்குத் தேர்வானார்.
2021 A/L பரீட்சையில் கணிதம் மற்றும் பொருளியல் பாடங்களில் A சித்திகளைப் பெற்று சாதித்திருந்தார்.
ஐந்துக்கு ஒன்பது உயரத்தில் ஐரோப்பிய சீனக் கலவையில் உலக மக்களைத் இன்று தன் பக்கம் திரும்ப வைத்திருக்கிறார் Emma Raducanu. Britain ஊடகங்களை தன் நிழற் படங்களால் நிரப்புகிறார்.
1975 இற்குப் பின்னர் சிரேஷ்ட டெனிஸ் சுற்றில் அரை இறுதிப் போட்டிக்கு Britain சார்பாக பெண் வீராங்கனை ஒருவர் முன்னேறி இருப்பது இதவே முதற்தடவையாகும்.
முகமட் ஜலீஸ், இங்கிலாந்து