கொழும்பு: MSC Messina எனும், கொள்கலன் கப்பலின் எஞ்சின் அறையில் தீ பரவியுள்ளதாக, இலங்கை கடற்படைக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

லைபீரிய கொடியுடனான குறித்த கப்பல், இலங்கைக்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையில், இலங்கையின் மகா ராவணா வௌிச்ச வீட்டிலிருந்து கிழக்கு திசையில், சுமார் 480 கடல்மைல் தொலைவில் இந்து சமுத்திரத்தில் இவ்வாறு தீப்பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் கொழும்பில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொணடிருந்த வேளையிலேயே இவ்வாறு தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.