தேசிய பாடசாலை விடயத்தில் முஸ்லிம்கள் போன்று தமிழர்கள் ஏன் ஆர்வம் செலுத்தவில்லை ? பாடசாலையின் அபிவிருத்திக்கு எது முக்கியம் ?

பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் காரணமாக மாகாணசபை முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகள் என்ற வேறுபாடுகள் இருந்ததில்லை.

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அப்பால் அனைத்து துறைகளிலும் மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதற்காகவே கல்வித்துறையில் தேசிய பாடசாலைகள் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஆயிரம் பாடசாலைகளை தரம் உயர்த்துதல் என்ற இன்றைய அரசாங்க கொள்கையின் கீழ் அண்மையில் கிழக்கு மாகாணத்தில் பல பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட விவகாரம் வாதப்பிரதிவாதங்களாக மாறியது. 

ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய வடமாகாணத்தில் 22பாடசாலைகளும், மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் 73 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

தங்களது உரிமை விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமின்றி உயிரை தியாகம் செய்து போராடிய தமிழ் சமூகத்தினர் தேசிய பாடசாலை விடயத்தில் ஆர்வம் காண்பிக்கவில்லை. 

ஆனால் முஸ்லிம்கள் அதிகம் ஆர்வம் செலுத்தியதன் காரணமாகவே கிழக்கு மாகாணத்தில் அதிகமான முஸ்லிம் பாடசாலைகள் தேசிய பாடசாலை என்றரீதியில் மத்திய அரசாங்கத்தின் கீழ் சென்றுள்ளது. 

ஜனாஸா எரிப்பு விடயத்தில் கடும் இறுக்கத்தை கடைப்பிடித்த அரசாங்கமானது, வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 500 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்க கோரினாலும் அதற்கு அரசாங்கம் மறுக்காது. இதனால் மத்திய அரசாங்கத்துக்கே அதிகார ஆதிக்கம் அதிகரிக்கின்றது.  

தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டால் அப்பாடசாலைகளை விரைவாக அபிவிருத்தி செய்ய முடியும் என்றும், அதிக அனுகூலங்களை பெற முடியும் என்பதும் சிலரது வாதமாகும். அதேநேரம் தாங்கள் தேசிய பாடசாலை ஆசிரியர்கள் என்ற மமதை சில ஆசிரியர்களிடம் உள்ளது.  

ஒரு பாடசாலையை அபிருத்தி செய்வதற்கு தேசிய பாடசாலை என்ற வரையறைக்குள் இருக்கவேண்டும் என்றில்லை. மாறாக திறமையான பாடசாலை நிருவாகத்துடன், பலமான பாடசாலை அபிவிருத்திச் சங்கம், துடிப்பான பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றோடு அரசியல் செல்வாக்கு இருந்தால் அது எந்த பாடசாலையாக இருந்தாலும் அதனை அபிவிருத்தி செய்ய முடியும். 

அதிபர் பிரச்சினை நிலவுகின்ற எந்தவொரு பாடசாலைகளும் அபிவிருத்தி அடைவதுமில்லை, அதன் கல்வி நடவடிக்கைகள் உயர்வதுமில்லை. இவ்வாறான பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் டியுசன் வகுப்புக்களை நம்பியே கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.  

மாகாணமோ அல்லது தேசியமோ எந்த பாடசாலைகளாக இருந்தாலும் இறுதியில் தேசிய பொது பரீட்சைகளான சாதாரண தரம், உயர் தரம் ஆகிய பரீட்சைகள் அனைத்தும் இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்றனவே தவிர, பல்கலைக்கழகங்கள் போன்று பாடசாலைகளினால் அல்ல. 

அதாவது மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்ற பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தல் என்ற ரீதியில் மத்திய அரசாங்கத்தின்கீழ் கொண்டுவருவதன் காரணமாக மாகாணங்களுக்கான அதிகாரம் குறைக்கப்படுகின்றதே தவிர, நாங்கள் எதிர்பார்ப்பதுபோன்று விஷேட அனுகூலங்கள் எதுவும் அதில் இல்லை. 

இதனாலேயே தேசிய பாடசாலைகள் விடயத்தில் தமிழ் சமூகத்தினர் அதிக ஆர்வம் செலுத்தவில்லை. வடமாகாணத்தில் கோரிக்கைகள் இருந்தும், வடமாகாண ஆளுனர் ஒரு தமிழர் என்பதனால் இதன் உண்மை நோக்கத்தை எடுத்துக்கூறியதன் விளைவாக பாடசாலை அதிபர்கள் தங்கள் கோரிக்கைகளிருந்து விலகியுள்ளனர். 

எனவே முஸ்லிம் கல்வி சமூகத்தை சேர்ந்த சிலர், தேசிய பாடசாலை விடயத்தில் அதிக ஆர்வம் செலுத்துவதானது அவர்களது சிறுபான்மை சமூக அரசியல் பற்றிய தெளிவான புரிதல் இன்மையை காண்பிக்கின்றது.

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s