புத்தளம்: புத்தளம் நகர சபைத் தலைவர் கமர்தீன் அப்துல் பாயிஸ் காலமானார். நேற்று (23) ஏற்பட்ட வாகன விபத்தைத் தொடர்ந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
மரணிக்கும்போது அவருக்கு 52 வயதாகும்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான கே.ஏ. பாயிஸ், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் இருந்துள்ளார்.
கடந்த 2004 முதல் 2010 காலப் பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அவர், 2007 – 2010 காலப் பகுதியில் மாகாணசபைகள் பிரதியமைச்சருமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.