சோதனைகள் நீங்க குனூத்துன்னாஸிலாவை ஓதிவருவோம் எனும் 22/05/2021 அஇஜஉ இன் அறிக்கை வியப்பளிக்கிறது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சோதனைகளின் போது வெசாக்கூடு ஏற்றுதல், குத்துவிளக்கு ஏற்றுதல், மிம்பர்களில் தனிநபர் புகழ்பாடுதல், வட்டிலப்பம் கொடுத்தல் போன்றவற்றில் அதிக ஈடுபாடுகளைக் காட்டிவிட்டு இன்று மட்டும் இப்படியான அறிக்கையை விட்டிருப்பது வியப்பளிக்கிறது.

கடந்த காலங்களில் ஜனாஸாக்கள் எரிக்கப்படும்போது விடாத இந்த அறிக்கை இப்போது தவழ்வது வேடிக்கை!
ஈமான் உள்ள முஸ்லிம் சோதனைகளின் போதும், மகிழ்ச்சியின் போதும் இறைவன் பக்கமே சார்ந்திருப்பானே தவிர, வெசாக்கூடு ஏற்றுதல், குத்துவிளக்கு ஏற்றுதல், மிம்பர்களில் தனிநபர் புகழ்பாடுதல், வட்டிலப்பம் கொடுத்தல் போன்ற விடயங்களில் ஈடுபடவுமாட்டான் நடிக்கவும் மாட்டான் என்பதை இவர்கள் புரயவேண்டும்!

– உசேன்