என்னை இயக்குவது யார் ? எனது பதிவுகள் யாருக்கு தாக்கம் செலுத்துகிறது??

எனது அரசியல் அலசல்கள், ஆய்வுகள், கருத்துக்கள் அனைத்தும் நீதியாகவும், எனது சமூகம் சார்ந்தும், நடு நிலையாகவும், அநீதிக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் மற்றும் மேட்டுக்குடி அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் உள்ளது.

சமூகத்தை வைத்து அரசியல் செய்கின்ற சுயநல அரசியல்வாதிகளுக்கும், மக்களை குழப்புகின்றவர்களுக்கும், பொய்யர்களுக்கும், அரசியல் வியாபாரிகளுக்கும் எனது பதிவுகள் அவ்வப்போது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. 

இதனால் எனது பதிவுகளை ஒரு பக்கச்சார்பானது என்றும், யாரோ என்னை இயக்குகின்றார்கள் என்றும் காண்பித்து எனது நியாயமான கருத்துக்கள் மீது நம்பகத்தன்மையை இல்லாமல் செய்வதற்கு சிலர் முற்படுகின்றனர். 

இதனால் நான் இருபதுக்கு கை உயர்த்திய ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு சார்பாக எழுதுவதாக வழமை போன்று முழு பொய்யான செய்தியை அவர்களது முகநூலில் பதிவிட்டுள்ளனர். 

அதாவது தலைவர் ரவுப் ஹக்கீமின் சகோதரர் ரவுப் ஹசீர் அவர்கள் நேரடியாகவும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவம் அவர்கள் மறைமுகமாகவும் பதிவிட்டுள்ளார்கள்.  

அதாவது ஹரீஸ் எம்பிக்கு அல்லது நசீர் அஹமத் எம்பிக்கு ஆதரவாக அல்லது அவர்கள் என்னை இயக்குவது போன்று காண்பிப்பதன் மூலம் எனது கருத்துக்களை பொய்யானது என்று காண்பிக்க முற்பட்டுள்ளனர். 

எனவே எனக்கும் ஹரீஸ் எம்பிக்கும் அல்லது நசீர் அஹமத் எம்பிக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என்றும், யாரும் என்னை இயக்கவில்லை என்றும் இதன் மூலம் அல்லாஹ்மீது ஆணையிட்டு கூறுகின்றேன். 

இருபதுக்கு கை உயர்த்திய பாராளுமன்ற உறுப்பினர்களை விமர்சித்து அவர்களுக்கு எதிராக ஏராளமான பதிவுகளையும், கட்டுரைகளையும் நான் எழுதியுள்ளேன் என்பதற்கு இந்த முகநூலே சாட்சியாகும். அப்பதிவுகளை உங்களால் பார்வையிட முடியும் 

கடந்த பொது தேர்தலில் மரச்சின்னத்தில் போட்டியிட்டதன் காரணமாக் நசீர் அஹமத் எம்பிக்கு ஆதரவளித்தது ரகசியமல்ல. ஆனால் அவர் இருபதுக்கு கை உயர்த்தியபின்பு அவருக்கு எதிராக முதன் முதலில் கருத்துக்களை பதிவிட்டிருந்தேன்.  

மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்துகின்ற அரசியல்வாதிகளுக்கு எனது கருத்துக்கள் எப்போதும் வேப்பங்காய் போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

( கட்டுரைக்குரிய படங்களை எமது முகநூல் பக்கத்தில் காண்க)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s