தேர்தல் காலங்களில் மகிந்த குடும்பத்தை முஸ்லிம்களுக்கு ஆபத்தானவர்கள் என்று மேடைகளில் முழங்கி, வாக்குப்பிச்சை எடுத்தபின்னர், இருபதுகளுக்காகவும், பதவிகளுக்காகவும் அடுத்த நிமிடம் பல்டி அடிக்கும் இந்த முஸ்லிம் பெயர்தாங்கி கும்பல்பற்றி உலகமே அறிந்த விடயம்.
முஸ்லிம்களின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலைகளின் போது முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த மதிப்பக்குரியவர்கள் சுமந்திரன் எம்.பி மற்றும் சாணக்கியன் எம்.பி. ஆகியோரை முஸ்லிம் சமூகம் மறக்க முடியாது.
இவ்வாறிருக்க, எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் பெரும்பான்மை ஒருவரை கிழக்கில் ஆளுனராக நிறுத்துவதற்கு இந்த இருபதுகள் மீண்டும் ஆளும்தரப்புடன் கைகோர்க்கப்போவதை விமர்சித்த சாணக்கியன் எம்.பி.யை இவர்கள் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதற்காக தற்போது இனவாத்த்தையும் கையிலெடுக்க முன்வந்துள்ளனர்.
நீங்கள் பெற்ற இருபதுகளுக்கு உண்மையில் நீங்கள் பொத்திக்கொண்டிருப்பதே உங்களுக்கு உகந்தது. முஸ்லிம் சமூகம் நசுக்கப்படும்போது வராத ரோசம், உங்களை விமர்சிக்கும் போது வருகிறதாக்கும்?
உங்கள் இயலாமையின் வெளிப்பாட்டினை எம் சமூகத்திற்காக குரல்கொடுப்பவர்கள் மீது காட்டாமல், பாராளுமன்றத்தில் எவ்வாறு வாய்மூடி இந்த சமூகத்தைக் காக்கின்றீர்களோ(? )அவ்வாறே தொடர்ந்தும் வாய்மூடியிருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
– உசேன்