மட்டக்களப்பு, தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் (56) பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தின்கீழ் ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச்திலுள்ள அவரது வீட்டிற்கு நேற்றிரவு (02) சென்ற ஏறாவூர்ப் பொலிஸார் இவரைக் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்த தெரிவித்தார்.
தடைசெய்யப்பட்ட எல்ரீரீஈ இயங்கத்தை மீளக்கட்டியெழுப்பு தொடர்பான ஊக்குவிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டதாக இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எல்ரீரீஈ இயக்கத்திற்கு பிரசாரம் கொடுக்கும் வகையில் படங்கள் மற்றும் காணொளிகளை இவரது முகப்பபுத்தகத்தினூடாக பதிவேற்றம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
குற்றப்புலனாய்வுப் பொலிஸார் இவரது நடவடிக்கைகளை நீண்ட காலமாக அவதானித்த பின்னரே கைதுசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறியவருகிறது.
எதிர்வரும் புதன்கிழமையன்று (05) இவரை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஏறாவூர்ப் பொலிஸார் கூறினர்.தற்போது இவர் ஏறாவூர்ப் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.