ஜெனீவா: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை 11 மேலதி வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான குறித்த பிரேரணையை எதிர்த்து பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா உள்ளிட்ட 11 நாடுகள் வாக்களித்திருந்த நிலையில், இந்தோனேஷியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிக்காது நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பிரான்ஸ், ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், இத்தாலி, பிரேசில், ஆர்ஜென்டீனா உள்ளிட்ட 22 நாடுகள், இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.