கொழும்பு: ஷரீஆ சட்டத்தை பின்பற்றவேண்டுமாக
இருந்தால் சவூதி அரேபியாவுக்கு
போகவேண்டிய தேவையில்லை.
நாடு சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே
அனைத்து இன மக்களுக்குமான தனியார்
சட்டங்கள் நாட்டில் அமுலில் இருக்கின்றன.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
விசாரணை அறிக்கையில் அரசாங்கம்
எதிர்பார்த்தவர்களுக்கு எதிராக எந்த
குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படவில்லை.
அதனால் முஸ்லிம்களின் மீது பழிசுமத்தி
திசைதிருப்பும் நடவடிக்கையை அரசாங்கம்
ஆரம்பித்துள்ளது என தேசிய ஐக்கிய
முன்னணியின் தலைவர் அஸாத் சாலி
தெரிவித்தார்.

இலங்கை மக்கள் நாட்டு சட்டத்தையே
பின்பற்றவேண்டும். அஸாத் சாலி ஷரீஆ
சட்டத்தை பின்பற்றுவதாக இருந்தால் சவூதி
அரேபியாவுக்கு செல்லவேண்டும் என
அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்த
கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு
குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து
தெரிவிக்கையில்,
எமது நாட்டில் வாழும் அனைத்து இன
மக்களுக்கும் அவர்களுக்குரிய தனியார்
சட்டங்கள் ஒல்லாந்தர் காலம் முதல் இருந்து
வருகின்றன.
சிங்கள மக்களுக்கு கண்டிய சட்டம்,
இந்துக்களுக்கு தேசவழமை சட்டம்
முஸ்லிம்களுக்கு முஸ்லிம் தனியார் சட்டம் என
நாடு சுதந்திரம் பெற்று 73 வருடகாலமாக எந்த
பிரச்சினையும் இல்லாமல் இந்த சட்டங்களை
பின்பற்றி வருகின்றோம். அதனால் ஷரீஆ
சட்டத்தை பின்பற்றுவதற்கு சவூதி
அரேபியாவுக்கு செல்லவேண்டியதில்லை.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இடம்பெற்ற பின்னர்தான் முஸ்லிம் தனியார்
சட்டத்தில் மாற்றங்களை
மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கைகள்
வந்தன.
தாக்குதலுக்கும் முஸ்லிம் தனியார்
சட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
என்றாலும் தனியார் சடத்தில் திருத்தங்களை
மேற்கொள்வதற்கு தேவை என்றிருந்தால்
அதனை முறையாக செய்யலாம்.
அவ்வாறு இல்லாமல் புர்காவை
தடைசெய்வோம் மத்ரசா பாடசாலைகளை
இல்லாமலாக்குவோம் என அரசாங்கத்து
நினைத்த பிரகாரம் செய்ய முடியாது.
அரசாங்கம் இதனை பலாத்காரமாக செய்ய
முற்படும்போதுதான் தேவையற்ற
பிரச்சினைகள் ஏற்படுவதற்கு
காரணமாகின்றன.
மேலும் அரசாங்கம் புர்காவை தடைசெய்வதன்
மூலம் நாட்டில் அடிப்படைவாத பிரச்சினைகள்
இல்லாமல் போகுமா என நாங்கள்
கேட்கின்றோம்.
ஆஜர்படுத்தவேண்டும்.
அம்பாறையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு
எதிரான பிரச்சினையை சரத் வீரசேகரதான்
திட்டமிட்டு மேற்கொண்டதாக முன்னாள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த
குரல் பதிவு என்னிடம் இருக்கின்றது.
இனங்களுக்கடையில் பிரச்சினையை
ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிரான
ஆதாரங்களையும் நீதிமன்றத்துக்கு
சமர்ப்பிப்போம் என்றார்.