இருபது நாட்களை தொடவுள்ளது காத்தான்குடி முடக்கம்.
மகிந்த குடும்பத்தினரின் விசுவாசிகள் காத்தான்குடியை தொடர்ந்து இறுக்கமாக வைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர். அது தெட்டத்தெளிவாகவே தெரிகிறது.

சிவப்பு எச்சரிக்கை விடுத்த அரசாங்கத்திற்கு ஊரைக் காட்டிக் கொடுத்த சம்மேளனம், ‘தேர்தல்கால’ ஊர் அரசியல்வாதிகளைச் சந்தித்து, நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளவோ, ஊர் முடக்க நிலையைத் தகர்த்துவதற்கு முயற்சி செய்யவோ இல்லை. சில ஆட்களுக்கு அறிக்கை விட்டிருப்பதாகத் தகவல்!

25 கோடியை வாங்கிக்கொண்டு 20க்கு கையை உயர்த்திய ‘தேர்தல்கால’ அரசியல்வாதிகளும் காத்தான்குடி முடக்கத்திலிருந்து மீள்வதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
காத்தான்குடி திட்டமிட்டு முடக்கப்படுகிறது.
மக்களே அவதானமாக இருங்கள்.
அல்லாஹ் எம்மை ஒருபோதும் கைவிடமாட்டான்.