காத்தான்குடி: தற்போது காத்தான்குடி பொலிஸ் பிரிவும்,
நாடளாவிய ரீதியில் பல கிராம சேவகர்
பிரிவுகளும் வீதி ஒழுங்கைகளும், சில
குடியிருப்பு தொகுதிகளும் மற்றும்
தோட்டங்களும் மாத்திரமே
தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்
ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர்
அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்நிலையில், காத்தான்குடி பொலிஸ் பிரிவை
தனிமைப்படுத்தி வைத்து தற்போது மூன்று
வாரங்களாகியுள்ளன.
எனினும் அந்த பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட
பி.சீ.ஆர் மற்றும் அன்டிஜன்
பரிசோதனைகளின் போது புதிதாக 190
பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிச்
செய்யப்பட்டுள்ளது.
அதனால் அந்த பகுதியை தற்போதைய
சூழ்நிலையில் விடுவிக்க முடியாது. இதனால்
அந்த பகுதிவாழ் மக்களை தொடர்ந்தும்
தனிமைப்படுத்தல் மற்றும் நோய்தடுப்பு
சட்டவிதிகளுக்கமைய
செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.