கொழும்பு: இன்றையதினம் (15) கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் பட்டியலின் அடிப்படையில், ஆண்கள் பாடசாலைகளில் தமிழ் மொழி மூலம், றோயல் கல்லூரியில் மாணவர்களை இணைப்பதற்கான குறைந்தபட்ச புள்ளிகளாக 187 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இது 180 புள்ளிகளாக காணப்பட்டது.

பெண்கள் பாடசாலைகளில் (தமிழ்) அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளியாக 181 புள்ளிகளும் (கடந்த முறை 175), பருத்தித்துறை மெதடிஸ் மகளிர் உயர் தர பாடசாலைக்கான வெட்டுப்புள்ளியாக 174 புள்ளிகளும் (கடந்த முறை 167), அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் கலவன் பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில், ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரிக்கு 181 புள்ளிகளும் (கடந்த முறை 168), மூதூர், மத்திய கல்லூரிக்கு 171 புள்ளிகளும் (கடந்த முறை 159) அறிவிக்கப்பட்டுள்ளன.
இம்முறை புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 20,000 என்பதோடு, இதில் விசேட தேவையுடைய மாணவர்கள் 250 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.