பொலன்னறுவை: பொலன்னறுவை, கல்லேல்ல கொவிட் சிகிச்சை நிலையத்திலிருந்து கடந்த டிசம்பர் 31ஆம் திகதி தப்பிச் சென்ற 5 கைதிகளில் 4 கைதிகளை கண்டுபிடிக்க உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்த தினத்தில் 5 பேர் தப்பிச் சென்ற நிலையில் ஏனைய 4 பேரையும் கண்டுபிடிக்க உதவுமாறு பொலிஸ் ஊடக்ப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவர்களில் தப்பிச் சென்ற ஐவரில் ஒருவரான, 27 வயதான, கவிந்து மதுஷான் என்பவர் அன்றையதினமே (31) சிலாபம், மாதம்பை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்டவர்:
மத்துமராலலாககே கவிந்து மதுஷான்
வயது: 27
குற்றம்: போதைப்பொருள் தொடர்பான குற்றம்
முகவரி: 191/M, சுதுவெல்ல வீதி, கிழக்கு வாடிய, வென்னப்புவ
ஏனைய நால்வரில் 3 பேரின் புகைப்படங்கள் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
தப்பிச் சென்ற ஏனைய நால்வரின் விபரங்கள்
1. தம்பல்லகே புத்திக விமலரத்ன
வயது: 31
முகவரி: போகஹபிட்டிய, கரகஹகெதர, நாரம்மல
குற்றம்: கர்ப்பழிப்பு
2. விஜேசூரிய ஆரச்சிகே ஹரித கெலும் அப்புஹாமி
வயது: 26
குற்றம்: திருட்டு
2ஆம் குறுக்குத் தெரு, பறூஸ வீதி, மாரவில
3. கெட்டயா என அழைக்கப்படும் இமியா முதியன்சலாகே வசந்த
வயது: 52
குற்றம்: கொள்ளை
அம்பகஹ கொலணி, அங்கம்பிட்டிய, வைக்கால
4. பீ.கே. சுமித் புஷ்பகுமார
வயது: 36
குற்றம்: போதைப்பொருள் தொடர்பான குற்றம்
1219/A, ஜயமாவத்த வீதி, பொரலெஸ்ஸ
குறித்த நபர்கள் தொடர்பில் விபரம் அறிந்தால், பொலன்னறுவை தலைமையக பொலிஸ் பரிசோதகரை, பின்வரும் தொலைபேசி ஊடாக அல்லது அவசர அழைப்பு நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
071- 8 91233
119