ஜனாஸா எரிப்பிற்கு எதிரான பொரளை போராட்டமும், முஸ்லிம் அரசியல்வாதிகளும்

கொழும்பு: முஸ்லிம்களின் ஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாங்கத்தின் அராஜக செயலை கண்டித்தும் இன்று கொழும்பு பொரளையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இன, சமைய, மொழி, கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பெரும்திரளான மக்கள் ஒன்றிணைந்து நடத்துகின்ற இந்த போராட்டம் வரவேற்கத்தக்கது. 

நாட்டின் சூழ்நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் வசிக்கின்ற என்னைப்போன்ற சமூக உணர்வுள்ள பலர் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாத கவலையையும் இங்கே பதிவு செய்கிறேன். 

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மாற்று மத பிரமுகர்கள் அனைவரும் முஸ்லிம்களுக்காகவே குரல் கொடுத்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது. 

அதேநேரம் இந்த போராட்டத்தில் முஸ்லிம் அரசியல் அதிகாரம் உள்ள பிரதிநிதிகளும், மக்களின் ஆணையை பெற்ற ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளும் கலந்துகொள்ளாத நிலையை பார்க்கின்றபோது இவர்களின் அரசியல் இலக்கு என்ன ? 

இவர்கள் யாருக்காக அல்லது எந்த சமூகத்திற்காக அரசியல் செய்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. ஆனால் இவர்கள் தேர்தல் காலங்களில் மேடைகளில் பேசிய வீர வசனங்கள் அனைவரதும் மனதையும் தொட்டுச் செல்கின்றது. 

முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றி தேர்தல் மேடைகளில் மட்டும் பேசுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. மாறாக இவ்வாறான சந்தர்ப்பத்தில் அனைவரும் தங்களது ஒற்றுமையை ஆட்சியாளர்களிடம் மட்டுமல்லாது சர்வதேசத்திற்கும் காண்பிக்க தவறியுள்ளனர்.   

முஸ்லிம் சமூகத்திடமும், அதன் தலைமைகளிடமும் ஓர் பாரிய பலயீனம் உள்ளது. அதாவது வெள்ளம் வரமுன்பு அணைகட்டும் விதமாக தூரநோக்கு எம்மவர்களிடம் இல்லை.  

இந்த போராட்டத்தை இரண்டாவது கொரோனா அலை பரவுவதற்கு முன்பு ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனாலும் ஏராளமனான எம்மவர்களின் ஜனாசாக்கள் எரிக்கப்பட்டதன் பின்பு, அதாவது பாமர மக்களினால் ஆங்காங்கே நாடு முழுவதிலும் சிறிய சிறிய போராட்டங்கள் நடாத்தி காண்பித்ததன் பின்புதான் அரசியல் பிரமுகர்களும், தலைவர்களும் போராட்ட களத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 

இன்றைய பொரல்லை கவன ஈர்ப்பு போராட்டத்துடன் தங்களது கடமை முடிந்துள்ளது என்று இருந்துவிடக்கூடாது. நியாயமான தீர்வு கிடைக்கும் வரைக்கும் நாடு முழுவதிலும் பரவலாக அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க வேண்டும் என்பது இதயசுத்தியுடன் நியாயம் கோருகின்றவர்களின் நிலைப்பாடாகும்.

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s