பிரேஸிலா: கொரோனா தொற்று தடுப்பூசிகளுக்கு வித்தியாசமான வகையில் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார் பிரேசிலிய ஜனாதிபதி ஜயிர் போல்சொனாரோ.
பைசர் – பயோஎன்டெக் உருவாக்கியுள்ள தடுப்பூசியைப் போட்டுக் கொள்வோர் முதலைகளாக மாறலாம் என்றும் பெண்களுக்குத் தாடி வளரும் என்றும் எச்சரித்துள்ளார் அவர்.

இதுவரை வைரஸ் தொற்று சாதாரண சளிக்காய்ச்சல் என்று கூறிவரும் அவர், தாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். பைசர் – பயோஎன்டெக் தடுப்பூசி பிரேசிலில் சோதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் அது பயன்படுத்தப்படுகிறது. பெண்களுக்குத் தாடி வளர்வது, ஆண்கள் பெண் குரலில் பேசத் தொடங்குவது போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டால் மருந்தாக்க நிறுவனம் அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளாது என்று கூறினார் போல்சொனாரோ.
பிரேசிலில் தடுப்பூசி இலவசம் என்றாலும் அதனைப் போட்டுக்கொள்வது கட்டாயமில்லை என்று கூறினார் அவர். ஆனால் மக்கள் தடுப்புமருந்து போட்டுக்கொள்வது அவசியம் என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரேசிலில் 7.1 மில்லியனுக்கும் அதிகமானோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். சுமார் 185,000 பேர் உயிரிழந்துள்ளனர்.