கொரோனா தொற்றிய தாய்க்கு ஒரே சூலில் 4 குழந்தைகள்

கொழும்பு: கொரோனோ நோய் தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணித் தாயொருவர் ஒரே சூலில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

கொழும்பு டி சொய்ஷா பெண்கள் மருத்துவமனையில் இந்நிகழ்வு பதிவாகியுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி சாகரி கிரிவந்துடுவ தெரிவித்தார்.

இவ்வாறு 4 குழந்தைகளைப் பெற்றெடுத்தவர், மருதானை குப்பியாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடையவர் என, அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, கொவிட்-19 தொற்றுக்குள்ளான தாயொருவர் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சையின் மூலம் இன்று (17) குறித்த 4 குழந்தைகளும் பிரசவிக்கப்பட்டுள்ளதோடு, அதில் இரு ஆண் குழந்தைகள், இரு பெண் குழந்தைகள் உள்ளடங்குவதாக, சாகரி கிரிவந்துடுவ தெரிவித்துள்ளார்.

குழந்தையும் தாயும், பிரசவம் தொடர்பான எவ்வித பிரச்சினையுமின்றி நலமாக இருப்பதாக, வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s