– நூருள் ஹுதா உமர்
அம்பாறை: அம்பாறை மாவட்ட காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியலய நிர்வாகத்தின் கீழுள்ள மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேர் கொரோனா தொற்றாளர் என இன்று (14) அடையாளப்படுத்தப்பட்டனர்.

மேலும் இவர்கள் நடமாடிய பகுதிகளை சுகாதார துறையினர் இன்று காலை முதல் நண்பகல் வரை முடக்கி மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியலய சுகாதார ஊழியர்களினால் பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.