கொழும்பு: நாட்டில் கொரோனா தொற்றால்
உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகளை
இடர் முகாமைத்துவ அமைச்சின் செலவில்
முன்னெடுக்குமாறு, சுகாதார தரப்பினருக்கு
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷ
பணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய , சவப்பெட்டிகளையும் இலவசமாக
வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை
விடுத்துள்ளார்.
மேலும், இனம், மதம் பேதமின்றி சகலருக்கும்
அரச செலவில் இறுதிக் கிரியைகளை
முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி ஆலோசனை
வழங்கியுள்ளாரென, சுகாதார சேவை
பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல
குணவர்தன தெரிவித்துள்ளார்.