ஜனவரி 10, ஜூன் 5, ஜூலை 5 ஆகிய தேதிகளுக்கு பிறகு நவம்பர் 30ஆம் தேதி நிகழவுள்ள நிலவு மறைப்பு 2020ஆம் ஆண்டில் நான்காவது மற்றும் கடைசி நிலவு மறைப்பாகும்.

இதற்கு முந்தைய மூன்று நிலவு மறைப்புகளையும் போல இதுவும் ஒரு புறநிழல் நிலவு மறைப்பாகவே இருக்கப்போகிறது.
சூரியன் – பூமி – நிலவு ஆகிய மூன்றும் நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி இடையில் வந்து மறைப்பதே சந்திர கிரகணம் ஆகும்.
நாளை நிகழப்போகும் கிரகணம், முழுமையான சந்திர கிரகணம் அல்ல. அதாவது நிலவு பூமியால் முற்றிலும் மறைக்கப்படாது.
ஐரோப்பா, ஆஃப்ரிக்கா, ஆசியா, இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் நிலவு ஒளி மங்கித் தெரிவதைத் திங்களன்று நிகழும் நிலவு மறைப்பின்போது காண முடியும்.