கொழும்பு: லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) 2020 கிரிக்கெட்
போட்டியில் காலி கிளாடியேட்டஸ் அணியின்
தொடக்க போட்டியில் விளையாட பாகிஸ்தான்
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷஹித் அப்ரிடிக்கு
இன்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை ஹம்பாந்தோட்டை, சூரியவெவ
மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது
எல்.பி.எல் போட்டியில் திஸர பெரேரா
தலைமையிலான யாழ்ப்பாணம்
ஸ்டாலியன்ஸை அப்ரிடி தலைமையிலான
காலி கிளாடியேட்டர்ஸ் அணி
எதிர்கொள்கின்றது.
இப் போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ்
அணிக்காகா விளையாட பாகிஸ்தான்
முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷஹித்
அப்ரிடி புதன்கிழமை (25) இலங்கை வந்தார்.
இந்நிலையில், இவருக்கு வெளிநாட்டு
வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டாய 07 நாள்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல்
எல்.பி.எல் போட்டிகளில் விளையாட
அனுமதிக்கப்பட்டுள்ளது.
அப்ரிடி இலங்கைக்கான விமானத்தை
திங்கட்கிழமை தவறவிட்டிருந்த நிலையில்
வெளிநாட்டு வீரர்கள் மீது கட்டாயமாக
தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை
காரணமாக காலி கிளாடியேட்டர்ஸின்
தொடக்க ஆட்டத்தை அப்ரிடி தவறவிடுவார் என
முந்தைய போட்டி அமைப்பாளர்கள்
அறிவித்திருந்தனர்.
இருந்த போதிலும் காலி கிளாடியேட்டர்ஸ்
அணியின் உரிமையாளர் நபீல் ஹாஷ்மி,
அப்ரிடி கொரோனாவிற்கான சிறப்பு
சோதனைகளின் பின்னர் இன்றைய
போட்டியில் விளையாட
அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை
உறுதிப்படுத்தியுள்ளார்.