டுபாய்: ஐக்கிய அரபு அமீரகம், தனது சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

200 நாடுகளை சேர்ந்த சுமார் 8.44 மில்லியன் மக்கள் வாழும் ஐக்கிய அரபு அமீரகம், அந்நாட்டினரின் தினசரி வாழ்வை எளிதாக்கும் வகையில், ஒரு சில புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் பெரும்பாலானவர்கள் தெற்காசியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குடிபெயர்ந்தவர்கள்.
இதில் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தினர் அல்லாது மற்ற நாடுகளில் இருந்து வந்து அங்கு வாழ்பவர்கள், அவர்களது தனிப்பட்ட சொந்த விஷயங்களில், தங்கள் சொந்த நாட்டில் என்ன சட்டம் உள்ளதோ அதனை பின்பற்றிக் கொள்ளலாம்.
உதாரணமாக விவாகரத்து, பிரிந்து வாழ்தல், சொத்து பிரிவினை, மது அருந்துதல், தற்கொலை, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உடனான பாலியல் உறவு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் உடனான உறவுகளை அமெரிக்காவின் உதவியுடன் சீராக்கியதை தொடர்ந்து இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சமீபத்தில் ஜக்கிய அரபு அமீரகத்துடனான உறவை மேம்படுத்தியது இஸ்ரேல்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இதனால் ஏற்கனவே இஸ்ரேலிய சுற்றுலா வாசிகளும் முதலீட்டாளர்களும் அதிகரித்துள்ளனர்.