பல நூறு கோடிகளுடன் தலைமறைவான ஆசாமி

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது: நாட்டில் கொரோனோ அச்சம் காரணமாக ஊரடங்கு அமுலில் இருக்கின்ற நிலையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் ஊடாக தப்பி சென்ற விடயம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் இன்று(8) மாலை நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

மேலும்  தங்கள் கருத்தில் தெரிவித்ததாவது

பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன  தலைவர் முகாமையாளர் என கூறப்படும் கணவன் மனைவியான அகமட் சரிம் முகம்மட் சிஹாப் (வயது 46) மற்றும் பாத்திமா பர்ஸானா மாக்கார் (வயது 39) மகன்  சிஹாப் அப்துல்லா முகம்மட் வசீம் (வயத  10) இந்தியாவிற்கு சட்டவிரோதமாக படகு ஒன்றில் சென்ற நிலையில்   நேற்று கைதாகியுள்ளனர்.

இவ்வாறு தப்பி சென்றவர்களின்  கடவுச்சீட்டு நீதிமன்ற உத்தவின் படி கடந்த 2020 மார்ச் 04 திகதி அளவில்   முடக்கக்கப்பட்டிருந்ததுடன் கல்முனை  பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

 மேலும் இவர்களிற்கு எதிராக 40 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவ்வாறு உள்ள நிலையில் நிலைமை மோசமடைவதை உணர்ந்த நிறுவனத் தலைவரான அகமட் சரிம் முகம்மட் சிஹாப் கடந்த 2020 ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எழுத்து மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும்  பணத்தை திருப்பி செலுத்துவதாக கடிதம் மூலம் அறிவித்தார். அத்துடன் சிலருக்கு காசோலையும் வழங்கி இருந்தார்.ஆனால் அந்த காசோலை செல்லுபடி அற்றிருந்ததுடன் காசோலையின்  கணக்கும் முடக்கப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் குறித்த நிறுவன தலைவரான அகமட் சரிம் முகம்மட் சிஹாப் என்பவர் தனது குடும்பத்துடன்  யாழ்ப்பாணத்தில் உள்ள நபர் ஒருவருக்கு  ரூபா 60 இலட்சத்தை செலுத்தி  எமது  நாட்டு சட்டத்தை மீறி சட்டவிரோதமாக பல கோடி மோசடியுடன் கடல்வழியாக தப்பி  சென்றிருக்கின்றார்.அங்கு சென்ற அவர் இந்திய பொலிசாரிடம் வியாபாரத்தில் நஷ்டம் என கூறி இருக்கின்றார். ஆனால் அவரிடம் எமது  பணம் உள்ளதுடன்  200 கோடி கல்முனையிலும் 1200 கோடி நாடு முழுவதும் மோசடி செய்துள்ளார்.

குறித்த  மோசடி நபர் கடந்த காலங்களில்  சுதந்திரமாக நடமாடி திரிந்தவர்.அரசின் பலதரப்பட்ட விசாரணை குழுக்களில் இவர் தொடர்பில் விசாரணை கோப்புக்கள் இருக்கிறது.   நாட்டில் கொரோனோ அச்சம் காரணமாக ஊரடங்கு அமுலில் இருக்கிறது. இவைகளெல்லாம் இப்படி இருக்க கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு  எப்படி இவர் சென்றிருக்க முடியும்.

போலியான முகவரியை அவர் பாவித்தே இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ள இந்நபர்    பல்வேறு முக்கிய தரப்பினரின் ஆதரவுடன் நடமாடுவதாகவே  எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இவரிடம் முக்கிய பல அதிகாரிகள் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு இந்தியாவிற்கு தப்பிக்க விட்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம் என கூறினர்.

நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த குறித்த நிதி நிறுவனம் கடந்த 06 வருடங்களாக கிழக்கு மாகாணம் உள்ளடங்களாக கிளைகளை பரப்பி எமது மக்களை பகடைக்காய்களாக்கி ஏமாற்றியுள்ளது.இதனால் இந்நிறுவனத்தின் கிளையில் பண வைப்பு செய்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s