சன்னி-ஷீயா பிரிவினை ஓர் அரசியல் முரண்பாடு என்பதை உணர்த்திய பிரான்ஸ்அதிபர்

அரசியல், கொள்கை முரண்பாடுகள், பிரதேசவாதம், தேசியவாதம், மொழி, மற்றும் மிதவாதம் – தீவிரவாதம் ஆகியவற்றால் பிரிந்துகிடந்த இஸ்லாமிய உலகம் இன்று ஒற்றுமைப்பட்டு உள்ளது.

கடந்த 17.10.2020 வெள்ளிக்கிழமை பிரான்சின் தலைநகரான பாரிசில் பதினெட்டு வயதுடைய முஸ்லிம் மாணவர் ஒருவர் சாமுவேல் என்னும் வரலாற்று ஆசிரியரின் கழுத்தை வெட்டி கொலை செய்திருந்தார்.   

நிர்வாண கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்து இதுதான் இறைதூதர் முஹம்மத் நபி என்று கூறி அதுபற்றி விளக்கமளித்ததனால் ஆத்திரமடைந்த ரஷ்யாவின் செச்னியாவை பூர்வீகமாகக்கொண்ட முஸ்லிம் மாணவர் ஒருவர் தனது டுவிட்டரில் கொலைக்கு பொறுப்பேற்று பதிவிட்டதன் பின்பு ஆசிரியரை கொலை செய்திருந்தார்.

பிரான்சில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருகின்ற காரணத்தினால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது குரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் விதத்தில் முகம்மது நபியை கேவலப்படுத்தியதனாலேயே இந்த பிரச்சினை உருவானது. 

ஆனாலும் பொறுப்புள்ள ஜனாதிபதி என்ற ரீதியில் பிரான்ஸ் அதிபர் இரு தரப்பாரையும் கண்டித்திருக்கலாம். அல்லது பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால் பிரச்சினையை உண்டுபண்ணிய ஆசிரியரின் செயலை நியாயப்படுத்தியதுடன், மாணவனின் செயலை ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்றும் கண்டித்திருந்தார். 

அத்துடன் முஹம்மது நபியை கேலிச்சித்திரம் வரைவது ஜனநாயக உரிமை என்று கூறியுள்ளதுடன், மரணித்த ஆசிரியரின் மரணச்சடங்கிலும் கலந்துகொண்டிருந்தார். பிரான்ஸ் அதிபரின் இந்த செயல் கேலிச்சித்திரம் வரைவதற்கு இன்னும் பலரை ஊக்கப்படுத்தியுள்ளது.

உருவமே காண்பிக்கமுடியாத முஹம்மது நபிக்கு கேலிச்சித்திரம் வரைவது ஜனநாயகம் என்றால், உருவம் கான்பிக்கப்படுகின்ற இயேசுவுக்கு கேலிச்சித்திரம் வரையுங்கள் என்பதுபோல பிரான்ஸ் அதிபரின் கூற்று உள்ளது. 

ஒரு பொறுப்புள்ள ஜனாதிபதியின் பக்கச்சார்பு கருத்தானது உலக முஸ்லிம்கள் அனைவரையும் கிளர்ந்தெழ செய்துள்ளது.   

உலகில் இஸ்லாமியர்களுக்கிடையில் ஷீயா, சுன்னி என்ற பிரிவினைகளும் மற்றும் மிதவாதம், தீவிரவாதம் போன்ற கொள்கை முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் அதிபரின் அறிக்கையானது அனைத்து பிரிவினர்களையும் ஒன்றிணைத்துள்ளது.

அதாவது தங்களுக்குள் இருந்த கொள்கை முரண்பாடுகள் அனைத்தையும் மறந்து இன்று ஷீயா, சுன்னி போன்ற அனைத்து தரப்பினர்களினாலும் தங்களது உயிருக்கு மேலாக நேசிக்கின்ற இறைதூதர் முஹம்மத் நபி அவர்களை இழிவாக பேசிய பிரான்ஸ் நாட்டின் அதிபருக்கு எதிராக திரண்டுள்ளார்கள். 

ஒரே இறைவனையும், ஒரே இறுதி வேதமான அல்-குர்ஆனையும், ஒரே இறைதூதர் முஹம்மத் நபி அவர்களையும் நம்புகின்ற முஸ்லிம்கள் ஷீயா, சுன்னி என்ற பிரிவினைகளை தோற்றுவித்து ஏன் முரண்படுகின்றாகள் என்று சிந்திக்கின்றபோது அதற்கு பின்னால் அரசியலும் இலுமினாட்டிகளும் உள்ளார்கள் என்பது புலனாகின்றது.  

சவூதி அரேபியா ஆட்சியாளர்கள் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு ஈராக்கை அழித்ததும், அதுபோல் ஈரானை அழிக்க முயற்சிப்பதும் ஷீயா – சுன்னி என்ற மார்க்க முரண்பாட்டினால் அல்ல. மாறாக அது அரசியல் என்பதனை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

எனவே எது எப்படி இருப்பினும் பிரான்சின் அதிபருக்கு எதிராக உலக முஸ்லிம்கள் ஒன்று திரண்டதுபோல் யூத பயங்கரவாதத்துக்கு எதிராகவும் ஒன்று திரண்டு மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்க வேண்டும் என்பதுதான் எமது பிரார்த்தனையாகும்.

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s