கொழும்பு: அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம், இன்று முதல் (29) 20ஆவது திருத்தம் அமுலுக்கு வருவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் 21 மற்றும் 22ஆம் திகதி இடம்பெற்ற இரு நாள் விவாதத்தை தொடர்ந்து, அரசியலமைப்பின்20ஆவது திருத்தம் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது..
இதற்கு ஆதரவாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த 8 எம்.பிக்கள் உள்ளிட்ட 156 பேரும் எதிராக 65 பேரும் வாக்களித்திருந்தனர். வாக்களிப்பின் போது மைத்திரிபால சிறிசேன சமூகமளித்திருக்கவில்லை.
இன்று (29) முற்பகல் 11.30 மணியளவில் சபாநாயகர் குறித்த திருத்தத்தில் கையெழுத்திட்டதாக அவர் தெரிவித்தார்.