“ரிசாட் பதியுதீன் ஊழல்வாதி”

பாறுக் ஷிஹான்

கல்முனை: ரிசாட் பதியுதீன் ஊழல்வாதி அல்லாவிடின் தலைமறைவாக இருப்பதனாது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் புர்க்கான் தெரிவித்தார்.

தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் தலைமறைவாக இருப்பதன் மர்மம் தொடர்பாக பொதுஜன பெரமுனவின் கல்முனை மத்திய குழு இன்று(18) ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு    மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

ஊழலற்ற நேர்மையான அரசியல்வாதியாக கடந்த காலங்களில்  தன்னை காட்டிக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் இன்று அவர் மீதான குற்றச்சாட்டிற்கு சட்டமா அதிபர் அல்லது நீதிமன்றத்திற்கு நியாயங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதானது மர்மமாகவே உள்ளது.அவர் மீதான நம்பிக்கை குறைவடைந்து தற்போது  முஸ்லீம் மக்கள் மத்தியில் பிழையான தலைமைத்துவம்  ஆக காட்டப்பட்டு வருகின்றார்.இவரை ஊழல் உள்ளவராக பல கட்சிகள் கடந்த காலங்களில் விமர்சித்துள்ள போதிலும் தற்போது அவர்களது கூற்றினை உறுதிப்படுத்தும் வகையில் தலைமறைவாகி உள்ளார்.இவரது இச்செயற்பாடு சகல முஸ்லீம் மக்களையும் அவமானப்படுத்துவதாக உள்ளது.இவர்  இவ்வாறான செயற்பாடுகளை கைவிட்டு நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டு சரணடைய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

இது தவிர பொதுஜன பெரமுனவுடன் முஸ்லீம் மக்களை சேரவிடாமல் அல்லது ஆதரவு வழங்க விடாது முஸ்லீம் தலைவர்களினால் ஏமாற்றப்பட்டுள்ளதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.அத்துடன் மேலும் மற்றுமொரு நாடகம் ஒன்றினை உருவாக்கி உள்ளனர்.றிசாட் பதியுதீனின் கைதினை 20 ஆவது அரசியல் சீர்திருத்த விடயத்துடன் இணைத்து பேசுகின்றனர்.இது ஏற்கமுடியாது என கூறுவதுடன் எதிர்காலங்களில் மாகாண சபை தேர்தலிலாவது தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டக்கொள்கின்றோம் என்றார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s