நீர்கொழும்பு: நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை
ஒன்றில் நடைபெற்றுவரும் க.பொ.தர உயர்தர
பரீட்சையின் போது இடம்பெற்றதாக
தெரிவிக்கப்படும் வினாத்தாள் மோசடி
தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம்
விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


குறித்த பாடசாலையின் அதிபரினால் உயர்தர
பரீட்சையின் போது வெளிநபர் ஒருவரின்
தொலைபேசி உரையாடலின் உதவியுடன்
மாணவர் ஒருவருக்கு விடையளிப்பதற்கு உதவி
புரிந்ததாக தெரிவிக்கப்பட்டே இவ்வாறு
முறைப்பாடு பதிவாகியுள்ளது.


இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்
ஏற்கனவே விசாரணைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்
ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் எமது
செய்திப் பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பிலான
விசாரணைகளை குற்றப் புலனாய்வு
பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு இலங்கை
ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.