கொழும்பு: கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 39 ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய, மினுவாங்கொடையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,346ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள 39 பேரில் 25 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஏனைய 14 பேரும் ஆடைத் தொழிற்சாலையின்  ஊழியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் எனவும், இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரை 4,791 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.