சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் 51 நாட்களாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென நேற்று கவலைக்கிடமானது.

இதனையடுத்து மருத்துவர்கள் உயிர்காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உயிர் பிரிந்தது. சென்னையில் எஸ்.பி.பி. மகன் சரண் இந்த தகவலை அறிவித்தார்.