“பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாலயே கட்டடம் சரிந்தது”

கண்டி – பூவெலிகடவில் தாழிறங்கிய 5 மாடி கட்டடம், பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

ஆவணப் படம்

பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் தளர்வான மண் உள்ள பகுதியில் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான புவிசரிதவியல் நிபுணர் சமந்த போகஹபிடிய தெரிவித்துள்ளார்.

பாரத்தைத் தாங்க முடியாமையால் கட்டடம் தாழிறங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட பேராசியர் அதுல சேனாரத்ன கட்டடம் தாழிறங்கிய இடத்திற்குச் சென்று கண்காணித்தார்.

இந்த இடத்தைச் சூழ வாழ்ந்த 4 குடும்பங்கள், தற்காலிகமாக வௌியேற்றப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் நிபுணர் சமந்த போகஹபிடிய கூறினார்.

இந்த 5 மாடி கட்டடம் தாழிறங்கியமைக்கு நில அதிர்வு காரணமல்ல என புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்தார்.

கண்டி – பூவெலிகட சங்கமித்ரா வீதியிலுள்ள இந்தக் கட்டடம் தாழிறங்கியதில் சிசுவொன்றும் அதன் பெற்றோரும் உயிரிழந்தனர். அருகிலுள்ள வீடொன்றின் மீது கட்டடம் சரிந்து வீழ்ந்ததில் அங்கிருந்த 6 பேர் சிக்கியதுடன், இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மூவரை பாதுகாப்பாக மீட்டனர்.

வர்த்தகரான சமில பிரசாத்தும் அவரின் மனைவியான சட்டத்தரணி அச்சலா ஏக்கநாயக்கவும் அவர்களது மகளும் உயிரிழந்தனர். இவர்கள் கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s