சார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள, சார்ஜா மருத்துவ பல்கலைக்கழகத்தில் 20 வயது பெண்ணின் கருப்பையில் உருவான 6 கிலோ கட்டியை வைத்தியர்கள் வெற்றிகரமாக
அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் மகப்பேறு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் முகம்மது ஜாயித் தலைமையிலான மருத்துவ குழு அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.

பல மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த 6 கிலோ எடையுள்ள கட்டியானது அகற்றப்பட்டது.
வைத்தியர்களின் இந்த சாதனைக்கு சார்ஜா மருத்துவ பல்கலைக்கழகத்தின் செயல் இயக்குனர் வைத்தியர் அலி ஒபைத் அல் அலி பாராட்டு தெரிவித்துள்ளார்.