கொழும்பு: தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா பாராளுமன்றத்திற்கு அணிந்து வந்த ஆடை காரணமாக பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு வெளியிட்டாலும் ஆளும் தரப்பினர் அவருக்கு ஆதரவாக திரண்டார்கள். இது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோ, அதாவுல்லா எம்.பியுடன் இது பற்றி தெளிவுபடுத்தியதையடுத்து அவர் சபையில் இருந்து வெளயில் சென்றார்.
பாராளுமன்றத்திற்குள் நுழைந்த ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் எம்.பி. அணிந்திருந்த ஆடை தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி நளின் பண்டார ஒழுங்குப் பிரச்சினையென்றை முன்வைத்தார்.
அதாவுல்லாஹ் எம்.பி அணிந்து வந்துள்ள ஆடை எவ்வகையானது. இவற்றை அணிய முடியாது என்றார்.
ஆனால் அது அவரின் பாரம்பரிய உடை என சபாநாயகர் கூறிய போதும் எதிரணியில் சிலர் தொடர்ந்து கோசமெழுப்பினர். இதன் போது ஆளும் தரப்பு எம்.பிகள் சிலர் அதாவுல்லா எம்.பியை சுற்றி நின்று இதுபற்றி அவருடன் உரையாடினார்கள்.
இந்த நிலையில் ஏ.எல்.எம். அதாவுல்லா எம்.பி ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து, தற்போது 20 ஆவது திருத்தமா? எனது உடையா? பிரச்சினை என விளக்கமளிக்க முற்பட்டார்.