கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வாக்குமூலம் வழங்குவதற்காக அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (04) முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம் வாக்குமூலம் வழங்குவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் தற்போது முன்னிலையாகியுள்ளார்.