பாதாள குழு உறுப்பினர் கஞ்சிப்பானை இம்ரானின் நெருங்கிய சகாவான ‘பிச்சை பாயிஸ்’ என அழைக்கப்படும் முஹம்மட் பாரூக் முஹம்மட் பாயிஸ் என்பவர் மாளிகாவத்தை பொலிஸாரினால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

48 வயதான இச்சந்தேகநபர், 2001 இல் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் குற்றஞ்சாட்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கஞ்சிப் பானை இம்ரான் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு குற்றச்செயல்களில் சந்தேகநபர் சம்பந்தப்பட்டுள்ளதாக, பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

அண்மையில் கையடக்கத் தொலைபேசியொன்றை கஞ்சிப்பானை இம்ரானிடம் ஒப்படைப்பதற்காக, குறித்த சந்தேகநபரான பிச்சை பாயிஸ், பூஸா சிறைச்சாலைக்கு எடுத்துச் சென்றதாக, மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.