அமானா வங்கியின் தலைவராக அஸ்கி அக்பரலி நியமனம்

அலி அஸ்கர் (அஸ்கி) அக்பரலி அமானா வங்கியின் பணிப்பாளர் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கியின் ஸ்தாபக தலைவரான ஒஸ்மான் காசிம் தனது கடமைகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்ததைத் தொடர்ந்து இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.

அங்கீகாரம் பெற்ற வணிக வங்கியொன்றில் பணிப்பாளர் சபையில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவர் ஆகக்கூடியது 9 வருடங்கள் வரை மாத்திரமே பணிப்பாளர் சபையில் அங்கம் வகிக்கலாம் என்ற இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களின் பிரகாரம், இலங்கையில் இஸ்லாமிய வங்கியியல் துறையில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்டுள்ள ஒஸ்மான் காசிம், அமானா வங்கியில் பணிப்பாளர் சபையில் ஒன்பது வருட காலமாக பணியாற்றியிருந்ததைத் தொடர்ந்து, ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வங்கியிலிருந்து ஓய்வு பெற்றாலும்;, வங்கியின் முதல் 10 பங்குதாரர்களில் ஒருவராக அவர் தொடர்ந்து திகழ்கிறார்.

அக்பர் பிரதர்ஸ் நிறுவனத்திலிருந்து பிரேரிக்கப்பட்ட பணிப்பாளராக, அஸ்கி அக்பரலி அமானா வங்கியுடன் 2020 ஜுலை மாதத்தில் இணைந்தார். வங்கியில் சட்டபூர்வ 9 வருடங்கள் பணிப்பாளராக கடமையாற்றி, ஒய்வு பெற்ற தயீப் அக்பரலியின் பொறுப்புகளை இவர் ஏற்றிருந்தார்.

உலகளாவிய ரீதியில் தேயிலை ஏற்றுமதிக்காகப் புகழ்பெற்றுள்ள, இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட கூட்டாண்மை நிறுவனங்களில் ஒன்றான அக்பர் பிரதர்ஸ் (பிரைவட்) லிமிடெட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் அக்பர் குரூப் நிறுவனத்தின் உற்பத்தி, சொத்துக்கள் விருத்தி, ஹோட்டல்கள் மற்றும் விருந்தோம்பல், சுகாதாரப் பராமரிப்பு, வலுப் பிறப்பாக்கல், பொதியிடல் மற்றும் அச்சிடல், சரக்குக் கையாளல் மற்றும் சூழல் சேவைகள் போன்ற பிரிவுகளில் இயங்கும் துணை நிறுவனங்களில் பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் Renewgen (Pvt) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளராக திகழ்வதுடன், Windforce (Pvt) Ltd, Hermitage Resorts (Pvt) Ltd, Uthurumaafaru Holding (Pvt) Ltd Maldives, Lhaviyani Holdings (Pvt) Ltd மற்றும் Cocoon Investments (Pvt) Ltd Maldives ஆகியவற்றின் தலைவராகவும் Alumex PLC இன் பணிப்பாளராகவும் அஸ்கி அக்பரலி திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அஸ்கி அக்பரலி ஜோர்தான் இராஜ்ஜியத்தின் தூதுவராகவும் திகழ்கின்றார். கலிபோர்னியா அரச பல்கலைக்கழகத்திடமிருந்து தொழிற்துறைசார் பொறியியல் பிரிவில் BSc பட்டம் பெற்றதுடன்;, சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவ முகாமையாளர்கள் கல்வியகத்தின் அங்கத்தவராகவும் இவர் திகழ்கின்றார்இ பழங்கால கார்கள் ரசிகராக அஸ்கி அக்பரலி திகழ்வதுடன், “Classic and Vintage Automobiles of Ceylon” எனும் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். இலங்கையின் Classic Car Club இன் காப்பாளராகவும் இவர் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தனது ஓய்வு அறிவிப்பு மற்றும் புதிய தலைவர்; நியமனம் தொடர்பில் வெளிச் செல்லும் தலைவரான ஒஸ்மான் காசிம் கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கி ஸ்தாபிக்கப்பட்டது முதல் அதன் தலைவராக செயலாற்றக் கிடைத்தமை உண்மையிலேயே மதிப்புக்குரிய விஷயம். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வங்கி வளர்ச்சியடைந்து இன்றைய நிலையில் காணப்படுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். வங்கியில் பணிப்பாளர் சபையில் 9 வருடங்களைப் பூர்த்தி செய்து, என்னுடன் பணியிலிருந்து ஓய்வு பெறும் சக பணிப்பாளர்களான தயீப் அக்பரலி, ஹர்ஷ அமரசேகர மற்றும் ஜஸ்ரி மக்தொன் இஸ்மாயில்; ஆகியோருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். வங்கி ஸ்தாபிக்கப்பட்டது முதல் வங்கியின் தூண்களாக இவர்கள் திகழ்ந்தனர்;.

புதிய தலைவர் அஸ்கி அக்பரலியை வரவேற்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். தமது சொந்த வியாபாரத்தை உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற தேயிலை நாமமாக தரமுயர்த்த இவர் ஆற்றிய பங்களிப்பு மற்றும் அதனூடாக பெற்றுக் கொண்ட அனுபவம் போன்றன, வங்கியின் முன்நோக்கிய செயற்பாடுகளுக்கு பெரிதும் கைகொடுக்கும் என நான் நம்புகின்றேன். வங்கியின் வளர்ச்சிக்காக செயலாற்றும் ஏனைய அங்கத்தவர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர், நிர்வாகக் குழுஇ மற்றும் ஊழியர்கள் ஆகியோர் தொடர்ச்சியாக வழங்கும் பங்களிப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றிட்கு நான் நன்றி தெறிவித்துக்கொள்ள விரும்புகிறேன்;. அமானா வங்கியை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றேன்.” என்றார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s