கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த
ராஜபக்ஷ நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை
களனி ரஜமஹா விகாரையில்
காலை 8.30 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற
தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில்
போட்டியிட்டு 527,364 விருப்பு வாக்குகளை
பெற்று வெற்றிபெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.