காலி: நாளை நடைபெறவுள்ள பொதுத்
தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை கொண்டு
சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு
சொந்தமான பஸ்ஸொன்று முச்சக்கர
வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 11.30 மணியளவில்
காலியிலிருந்து உதுமக நோக்கிச் சென்ற பஸ்
ஒன்றுடன் ஹியாரே சந்தியில், எதிர்திசையில்
வந்த முச்சக்கர வண்டி மோதுண்டே இந்த
விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின்
சாரதி கரபிட்டி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் அக்மீமன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.