லண்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் என்
கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார் என
பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்ட
பயிற்சியாளர் கிராண்ட் பிளவர்
அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் துடுப்பாட்ட பயிற்சியாளராக
பணியாற்றிய சிம்பாப்வே நாட்டை சேர்ந்த
கிராண்ட் பிளவர் தனது பயிற்சி அனுபவங்கள்
குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ்
கானுக்கு ஒருமுறை சில ஆலோசனைகளை
வழங்க முயன்றேன். அப்போது, அவர் என்
கழுத்தில் கத்தியை வைத்தார் என கூறி
உள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (பிசிபி) சமீபத்தில்
முன்னாள் அணியின் தலைவர் யூனிஸ் கானை
தேசிய அணியின் துடுப்பாட்ட
பயிற்சியாளராகவும், முஷ்தாக் அகமதுவை
சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராகவும்
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு
நியமிப்பதாக அறிவித்துள்ளது.
யூனுஸ்கான் டெஸ்ட் கிரிக்கெட்டில்
பாகிஸ்தானுக்காக 10000 ஓட்டங்களுக்கு மேல்
அடித்து உள்ளார்.
ஐ.சி.சி தரவரிசையில் சிறந்த துடுப்பாட்ட
வீரராக வலம் வந்தார். அவர் 2017 ஆம் ஆண்டில்
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக
அறிவித்தார். அவர் தற்போது இங்கிலாந்து
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார், அங்கு
அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்
துடுப்பாட்ட பயிற்சியாளராக உள்ளார்.
இந்நிலையிலேயே, கிராண்ட் பிளவர்
மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.