காத்தான்குடியில் இரு கண்களில் ஒன்றாகவும் எமது தாய் நிறுவெனமென நம் எல்லோறாலும் மதிக்கப்படும் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அன்மைக்கால செயட்பாடுகள் தொடர்பாக பல்வேறு விமர்சனம்கள் முன்வைக்கப்படுகிறது.

கடந்த 28.06.2020 ஞாயிற்றுக்கிழமை கா.ப.மு.நிறுவனங்களின் புதிய பொதுச்சபையின் நிர்வாகத் தெரிவு நடைபெறவிருந்த நிலையில் கடந்த 27.06.2020 சனிக்கிழமை இரவு குறித்த பொதுச்சபை தெரிவு தவிர்க்க முடியாக காரணத்தினால் நடைபெறாதுயென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஆராய்ந்த போது பல்வேறு உண்மை தகவல்கள் கிடைக்கப்பெற்றது.
சம்மேளன பொதுச்சபை கூட்டம் ஒவ்வொரு வருடமும் மெத்தைப் பள்ளிவாயளில் உள்ள மேல் மாடி கட்டிட தொகுதியில் நடைபெறும்.
இதற்கான அனுமதியினை எழுத்துமூலம் கா.ப.மு.நி சம்மேளனம் மெத்தைப்பள்ளி நிர்வாகத்துக்கு கடிதம் வழங்கி இட அனுமதியினை பெற்றுக்கொள்ளும்.
இம்முறையும் அதேபோன்று அனுமதியினை மெத்தைப்பள்ளி நிர்வாகத்திடம் பெற்றுக்கொள்ளுமாறு பொதுச்சபை தெரிவு நடைபெற இருந்த 28.06.2020 தினத்தில் இருந்து இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற சம்மேளன வாரந்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் பொதுச்சபை தெரிவு நடைபெற இருந்த 28.06.2020 ஞாயிற்றுக்கிழமை முன்தினமான அதாவது (27)
சனிக்கிழமை இரவுவரை மெத்தைப்பள்ளி நிர்வாகத்தினருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டு அனுமதி பெறப்படவில்லை.
இவ்வாரு அனுமதி பெறாமல் இருந்த நேரத்தில்தான் பொதுச்சபை கூட்டமும் சனிக்கிழமை இரவு பிற்போடப்பட்டுள்ளது.
அது தொடர்பில் பொது நிறுவனங்களுக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகிறது.
விடயத்துக்கு வருகிறேன்.
ஏன் பொதுச்சபை நிர்வாக தெரிவு பிற்போடப்பட்டது ?
பொதுச்சபை கூட்டம் நடைபெற இருந்த ஞாயிற்றுக்கிழமை (28) தினத்துக்கு முன் தினம் (27) சனிக்கிழமையென்று தேர்தல்கள் தினைக்களத்தால் சம்மேளனத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுச்சபை தெரிவு நடாத்த முடியாதுயென்றும் அதில் சில சட்ட பிரச்சினை உள்ளதால் நிர்வாக
தெரிவை இரத்து செய்யுமாறு தெரிவிக்கப்பட்டமைக்கு அமைய பொதுச்சபை நிர்வாக தெரிவு
பிற்போடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
உண்மையில் அவ்வாறு நடைபெற்று இருந்தால்?
பொறுப்பு வாய்ந்த நிறுவனமும், சட்டத்துரை சார்ந்தவர்கள் மற்றும்
மூத்த பல பளமை வாய்ந்தவர்களையும் உள்ளடக்கிய பாரிய நிறுவனம் இந்த அடிப்படை சட்ட நுனுக்கம் தெரியாமலா நிர்வாக தெரிவுக்கான திகதி அறிவிக்கப்பட்டிருந்தது ?
ஏன் ? நிர்வாகத்தெரிவுக்கான
திகதி (28) வரை நிர்வாக தெரிவுக்கான இட அனுமதிக்கான கடிதத்தை மெத்தைப்பள்ளிவாயல் நிர்வாகத்திற்கு
வழங்காமல் இருந்தது ?
அது மாத்திரமல்ல,
சம்மேளன தலைவரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்கள் அறியக்கிடைக்கின்றது.
சம்மேளனம் நிதி விடயங்களை செலவு செய்வதாக இருந்தால் அதற்கென சில பொறிமுறைகள் உள்ளது.
சம்மேளனத்தின் செயட்பாடுகளை இலகுபடுத்த கல்வி, காணி , ஹஜ்,
சகாத் என்று ஒவ்வொரு தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.
ஒவ்வொரு குழுவாலும் எடுக்கப்படும் முடிவுகள் வாராந்த பொதுச்சபை கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டு அது
சார்ந்த விடயங்கள் முன்னெடுக்கப்படும்.
இதற்கு மேலதிகமாக 55 பேர்களை உள்ளடக்கிய அவசரக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு ஊடாக அவரசமாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்களை அவசரக்குழு ஒன்று
கூடி முன்னெடுக்கப்படும்.
இதுதான் சம்மேளனத்தின் நடைமுறைசார்ந்த ஆரம்ப
அடிப்படை நடைமுறையாகும்.
இதற்கும் அப்பால் தலைவர்,
மற்றும் ஏனைய ஒருவரால் தனித்தீர்மானம் ஒன்றை எடுக்க முடியாது.
ஆனால் மேல் உள்ள நடைமுறைக்கு அப்பால் சில விடயங்கள்
நடந்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
காத்தான்குடி தள வைத்தியசாலை கொரோனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டு முதல் பகுதி நோயாளர்கள் சிகிச்சை பெற்று வெளியேறும் அன்று வைத்தியசாலை வளாகத்தில் வைத்து சில அன்பளிப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான ஒரு பகுதி நிதியினை சம்மேளனம் எந்த அனுமதியில்லாமல் செலவு செய்ததாக அறிய முடிகிறது. இந்த விடயம் அவசியமான ஒன்றாக இருந்தாலும் தலைவர் அவர்களால் இந்த நிகழ்வில் சம்மேளன அங்கத்தவர்களை கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தல் இல்லாமல் அரசியல் பின்புலங்கள் பெயர் போட்டுக்கொண்ட சம்பவங்களாக இவை நடந்தேறியது.
காத்தான்குடி தள வைத்தியசாலை கொரோனா வைத்தியசாலையாக மாற்றப்பட்ட பின் கலாச்சார மண்டபத்தில் தற்காலிகமாக வைத்தியசாலை மாற்றப்பட்டபோது அதற்கு தேவையான செலவினங்களையும் சம்மேளன தீர்மானமின்றி செலவு செய்துள்ளது
இதற்கும் அரசியல் பின்புலங்கள் பெயர் போட்டுக்கொண்டதையும் இங்கு நினைவுபடுத்திக்கொள்கிறேன்.
கொரோனா தாக்கத்தால் காத்தான்குடியில் தங்கியிருந்த இந்தியர்கள் இங்கிருந்து அனுப்பப்பட்டபோது அவர்களுக்கான காலை உணவினை சம்மேளனம் செலவு செய்துள்ளது.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் அவசரக்குழுவாலோ அல்லது ஏனைய கூட்டத்திலோ தீர்மானம் எடுக்காமல் தலைவர் அவர்களின் தன்னிச்சையான தீர்மானத்தால் எடுக்கப்பட்டு அரசியல் பின்புலங்கள் பெயர் போட்டுகொண்ட விடயங்களாகும்.
எமதூரின் தாய் நிறுவனமான சம்மேளனம் தொடர்பாக பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் அதுவே எமதூரின் தாய்நிறுவனமென நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம்.
எதிர்காலத்தில் இந்நிறுவனத்தினூடான
தேவை எமதூருக்கு அதிகம் வேண்டிநிற்கின்ற நேரத்தில் இப்பொதுச்சபை தெரிவு இடம்பெறவுள்ளது.
சம்மேளனம் உறுப்புரிமை பெற்று
நானும் சம்மேளன உறுப்பினரென ஜக்கிய நாடுகள் சபை உறுப்பினர் போன்ற நினைப்புக்காக சம்மேளன உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளாமல் அல்லாஹ்வின் அமானிதமான பணிகளென இவ்விடயத்தை பொறுப்பாக்கிக் கொள்ளுங்கள்.
அத்துடன் அரசியல் ஏஜன்டுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு தாய் நிறுவனம் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாக்க வேண்டிதும் உறுப்புரிமை பெறும் அனைவரினதும் பொறுப்பாகும்.
ஹஜ் குழுவின் தன்னிச்சையான செயட்பாடு தொடர்பாக அடுத்த பதில் தொடர்கிறேன்.
முஹம்மட் பர்சாத்
காத்தான்குடி,
(தலைப்பு மாற்றப்பட்டுள்ளது)