கொழும்பு: இலங்கை இராணுவத்தின் பொறியியல்
பிரிவினரால் தயாரிக்கப்பட்ட ஒன்பது கவச
வாகனங்களை (யுனிபவள்) இராணுவத்தளபதி
லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று
வெள்ளிக்கிழமை காலை பத்தரமுல்லையில்
அமைந்துள்ள இராணுவத்தலைமையகத்தில்
பார்வையிட்டார். ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில்
பணியாற்றும் இலங்கை படையினரின்
பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்டவை
மாலிக்கு இலங்கை இராணுவத்தினாரால்
கையளிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில்
பணியாற்றும் இலங்கை படையினரின்
பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்டவை
மாலிக்கு இலங்கை இராணுவத்தினாரால்
கையளிக்கப்பட்டது.
ஒன்பது கனரக கவச வாகனங்களையும்
கண்காணித்து பரிசோதனைக்கு உட்படுத்தும்
நிகழ்வு பத்தரமுல்லை
இராணுவத்தலைமையகத்தில்
இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல்
சவேந்திர சில்வா தலைமையில் இடம்
பெற்றது.
இதன்போது ஒன்பது கனரக கவச
வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த
ஒன்பது வாகனங்களும் பென்லையின்
ஏயன்சியின் முகாமையாளர் ரஹிலீன்
போரத்திடம் இராணுவத்தளபதியால்
ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த
இராணுவத்தளபதி கூறியதாவது ,
மாலி நாட்டில் சேவையாற்றும் இலங்கை
இராணுவத்தினரின் பாவனைக்காக எமது
இராணுவத்தினரின் மின்னியல் பொறியியல்
பிரிவினரால் இந்த வாகனங்கள்
தயாரிக்கப்பட்டுள்ளன.
ஒரு கவச வாகனதயாரிப்பிற்கு 10 மில்லியன்
ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவற்றை
வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு
செய்வதாயின் ஒரு வாகனத்திற்கு 40
மில்லியன் ரூபாய் வரையில்
செலவிடவேண்டியிருக்கும்.